Saturday, September 19
Shadow

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழுவினர்.

இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உலகநாயகன் கமல்ஹாசன் விபத்தில் உயிரிழந்த முன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் இன்று இந்தியன்-2 திரைப்படம் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை இந்தியன் 2 திரைப்படத்தின் படக்குழுவினர் இன்று வழங்கினர்.

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய்.ஒரு கோடி இழப்பீட்டை உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் வழங்கினார்கள்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல் இனி இது போன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என  இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.

வரும் முன் காப்பது அவசியம், இனி இதுபோன்று நிகழாமல் இருக்க பேசிக்கொண்டு இருக்கிறோம்.

மேலும் கொரோனா காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின் படி நடப்போம் என்று உலகநாயகன் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு RKசெல்வமணி மற்றும்
சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம்
சம்மேளனத்தின் பொருளாளர் பி. என். சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.