இன்றைய ராசிபலன்கள் 03/11/2024

இன்றைய ராசிபலன்கள் 

03-11-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :

03-11-2024

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 17
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ துவிதியை – Nov 02 08:22 PM – Nov 03 10:05 PM

சுக்ல பக்ஷ திருதியை – Nov 03 10:05 PM – Nov 04 11:24 PM

நட்சத்திரம்

அனுஷம் – Nov 03 05:58 AM – Nov 04 08:04 AM

கரணம்

பாலவம் – Nov 02 08:22 PM – Nov 03 09:16 AM

கௌலவம் – Nov 03 09:16 AM – Nov 03 10:05 PM

சைதுளை – Nov 03 10:05 PM – Nov 04 10:48 AM

யோகம்

சௌபாக்யம் – Nov 02 11:18 AM – Nov 03 11:39 AM

சோபனம் – Nov 03 11:39 AM – Nov 04 11:43 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM
சூரியஸ்தமம் – 5:54 PM

சந்திரௌதயம் – Nov 03 7:23 AM
சந்திராஸ்தமனம் – Nov 03 7:16 PM

அசுபமான காலம்

இராகு – 4:26 PM – 5:54 PM
எமகண்டம் – 12:03 PM – 1:31 PM
குளிகை – 2:58 PM – 4:26 PM

துரமுஹுர்த்தம் – 04:20 PM – 05:07 PM

தியாஜ்யம் – 10:19 AM – 12:03 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:39 AM – 12:26 PM

அமிர்த காலம் – 09:09 PM – 10:53 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

*ஆனந்ததி யோகம்*

மிருத்யு

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

(03-11-2024) இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரம் நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துகளை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : நெருக்கடியான நாள்.
கிருத்திகை : மாற்றமான நாள்.

ரிஷபம்

நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் நீங்கும்.

மிதுனம்

போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : அலைச்சல் அதிகரிக்கும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

கடகம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். காப்பீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம்

உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். மனதில் சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்

கன்னி

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குறுந்தொழில் செயல்களில் சாதகமான சூழல் ஏற்படும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திரம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : ஆதரவுகள் மேம்படும்.

துலாம்

பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிதானமான செயல்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : அனுபவம் வெளிப்படும்.
விசாகம் : கனிவு வேண்டும்.

விருச்சிகம்

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபார நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை அறிவீர்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.

தனுசு

உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : அனுபவங்கள் ஏற்படும்.
உத்திராடம் : வரவுகள் கிடைக்கும்.

மகரம்

தன வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சில பணிகளில் அனுசரித்துச் செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : முடிவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

கும்பம்

தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

மீனம்

உயர் பொறுப்பில் இருப்போர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கமிஷன் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திரட்டாதி : கையிருப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம் ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN

  1. +919942285750
error: Content is protected !!