இன்றைய ராசிபலன்கள் 13/07/2024

இன்றைய ராசிபலன்கள்
ஆனி: சனிக்கிழமை
  //.

மேஷம் – ராசி.

பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் வரவுகளால் மேன்மை உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பயணங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிபட்ட ஆர்வம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அஸ்வினி : பொறுப்புகள் கிடைக்கும்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம் – ராசி.

மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடினமான விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : தடுமாற்றமான நாள்.

மிதுனம்- ராசி.

உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
திருவாதிரை : தெளிவு பிறக்கும்.
புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும்.

கடகம் – ராசி.

வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சிம்மம் – ராசி.

பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் சூழ்நிலைக்கேற்பன செயல்படவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.
உத்திரம் : நெருக்கடிகள் ஏற்படும்.

கன்னி – ராசி.

சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதளவில் இறுக்கமான சூழல் ஏற்படும். எதிலும் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

உத்திரம் : இறுக்கமான நாள்.
அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும்.
சித்திரை : சோர்வான நாள்.

துலாம் – ராசி.

புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் மேன்மை உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தொழில் சார்ந்த செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம் – ராசி.

பழைய பிரச்சனைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். தன வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழி உறவுகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலை வருத்திய இன்னல்கள் குறையும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

விசாகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.

தனுசு – ராசி.

பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு பணிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : போட்டிகள் உண்டாகும்.
உத்திராடம் : முடிவுகளை எடுப்பீர்கள்.

மகரம் – ராசி.

இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். செயல்பாடுகளில் தனித்தன்மை வெளிப்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம் : போட்டிகள் குறையும்.
அவிட்டம் : தனித்தன்மை வெளிப்படும்.

கும்பம் – ராசி.

உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

அவிட்டம் : பொறுமை வேண்டும்.
சதயம் : கவனத்துடன் இருக்கவும்.
பூரட்டாதி : சோர்வுகள் உண்டாகும்.

மீனம் – ராசி.

கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : நட்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.