இன்றைய ராசிபலன்கள் 21/11/2024.
இன்றைய ராசிபலன்கள்
21-11-2024 வியாழக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, கார்த்திகை 6
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ சஷ்டி – Nov 20 04:49 PM – Nov 21 05:03 PM
கிருஷ்ண பக்ஷ சப்தமி – Nov 21 05:03 PM – Nov 22 06:08 PM
நட்சத்திரம்
பூசம் – Nov 20 02:50 PM – Nov 21 03:35 PM
ஆயில்யம் – Nov 21 03:35 PM – Nov 22 05:10 PM
கரணம்
வனசை – Nov 21 04:50 AM – Nov 21 05:03 PM
பத்திரை – Nov 21 05:03 PM – Nov 22 05:29 AM
பவம் – Nov 22 05:29 AM – Nov 22 06:08 PM
யோகம்
சுப்ரம் – Nov 20 01:08 PM – Nov 21 12:01 PM
பராம்யம் – Nov 21 12:01 PM – Nov 22 11:33 AM
வாரம்
வியாழக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.
சூரியோதயம் – 6:17 AM
சூரியஸ்தமம் – 5:53 PM
சந்திரௌதயம் – Nov 21 11:17 PM
சந்திராஸ்தமனம் – Nov 22 12:03 PM
அசுபமான காலம்
இராகு – 1:32 PM – 2:59 PM
எமகண்டம் – 6:17 AM – 7:44 AM
குளிகை – 9:11 AM – 10:38 AM
துரமுஹுர்த்தம் – 10:09 AM – 10:56 AM, 02:48 PM – 03:34 PM
தியாஜ்யம் – 05:13 AM – 06:55 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:42 AM – 12:28 PM
அமிர்த காலம் – 08:59 AM – 10:38 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:41 AM – 05:29 AM
ஆனந்ததி யோகம்
சுபம் Upto – 03:35 PM
அமுதம்
வாரசூலை
சூலம் – South
பரிகாரம் – தைலம்
சூர்யா ராசி
சூரியன் விருச்சிகம் ராசியில்
சந்திர ராசி
கடகம் (முழு தினம்)
வியாழக்கிழமை ஹோரை.
காலை
06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்
மாலை
03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
21-11-2024 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசால் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
அஸ்வினி : சிந்தித்துச் செயல்படவும்.
பரணி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.
ரிஷபம்
சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.
ரோகிணி : லாபகரமான நாள்.
மிருகசீரிஷம் : தைரியம் மேம்படும்.
மிதுனம்
தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
திருவாதிரை : செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அலைச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்
வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : புதுமையான நாள்.
கன்னி
பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : மனப்பக்குவம் பிறக்கும்.
துலாம்
உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : பயணங்கள் கைகூடும்.
விசாகம் : மதிப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
அனுஷம் : செல்வாக்கு மேம்படும்.
கேட்டை : ஆதாயகரமான நாள்.
தனுசு
புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
மகரம்
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : அறிமுகங்கள் ஏற்படும்.
திருவோணம் : திருப்தியான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
மீனம்
வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.
நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN
+919942285750.




