இன்றைய ராசிபலன்கள் 30/11/2024

இன்றைய ராசிபலன்கள்

30-11-2024 சனிக்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, கார்த்திகை 15
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்தசி – Nov 29 08:40 AM – Nov 30 10:30 AM

கிருஷ்ண பக்ஷ அமாவாசை – Nov 30 10:30 AM – Dec 01 11:51 AM

நட்சத்திரம்

விசாகம் – Nov 29 10:18 AM – Nov 30 12:34 PM

அனுஷம் – Nov 30 12:34 PM – Dec 01 02:23 PM

கரணம்

சகுனி – Nov 29 09:38 PM – Nov 30 10:30 AM

சதுஷ்பாதம் – Nov 30 10:30 AM – Nov 30 11:14 PM

நாகவம் – Nov 30 11:14 PM – Dec 01 11:51 AM

யோகம்

அதிகண்டம் – Nov 29 04:33 PM – Nov 30 04:44 PM

சுகர்மம் – Nov 30 04:44 PM – Dec 01 04:33 PM

வாரம்

சனிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:21 AM
சூரியஸ்தமம் – 5:55 PM

சந்திரௌதயம் – Nov 30 5:17 AM
சந்திராஸ்தமனம் – Nov 30 5:12 PM

அசுபமான காலம்

இராகு – 9:15 AM – 10:41 AM
எமகண்டம் – 1:35 PM – 3:01 PM
குளிகை – 6:21 AM – 7:48 AM

துரமுஹுர்த்தம் – 07:54 AM – 08:40 AM

தியாஜ்யம் – 04:52 PM – 06:35 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:45 AM – 12:31 PM

அமிர்த காலம் – 03:11 AM – 04:55 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:45 AM – 05:33 AM

ஆனந்ததி யோகம்

சுபம் Upto – 12:34 PM
அமுதம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

சூர்யா ராசி

சூரியன் விருச்சிகம் ராசியில்

சந்திர ராசி

விருச்சிகம் (முழு தினம்)

சனிக்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

30-11-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். மறைமுகமான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தோன்றி மறையும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே பணிகளைச் செய்வது நல்லது. சில விஷயங்களுக்கு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : பொறுமையுடன் செயல்படவும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரிஷபம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
ரோகிணி : தெளிவு பிறக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம்

உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். சில நேரங்களில் மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்த தன்மையும் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : சோர்வு ஏற்படும்.

கடகம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்து யோசிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்ற முயற்சிகள் கைகூடும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆதரவு உண்டாகும்.
பூசம் : மதிப்புகள் மேம்படும்.
ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்

தாய் வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : வேறுபாடுகள் குறையும்.
பூரம் : திருப்தி உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுவிதமான சூழல் காணப்படும். நீண்ட நாள் ஆசைகளும் எண்ணங்களும் நிறைவேறும். சட்ட நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : புதுமை உண்டாகும்.
சித்திரை : புரிதல் மேம்படும்.

துலாம்

ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.
சுவாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தன வரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அனுஷம் : குழப்பம் ஏற்படும்.
கேட்டை : தெளிவுகள் பிறக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையில் இருந்துவந்த தடைகள் நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : தடைகள் நீங்கும்.

மகரம்

திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒப்பந்தப் பணிகள் சாதகமாக நிறைவு பெறும். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சாதகம் உண்டாகும்.
திருவோணம் : மதிப்புகள் மேம்படும்.
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

கும்பம்

வியாபார பணியில் லாபங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

அவிட்டம் : லாபங்கள் மேம்படும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.

மீனம்

ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சிப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பழக்கவழக்க விஷயங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி : மாற்றங்கள் பிறக்கும்.

ஜோதிட ஆலோசனைக்கு நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN +919942285750

error: Content is protected !!