இன்றைய ராசிபலன்கள் 04/12/2024.

இன்றைய ராசிபலன்கள் 

04-12-2024 புதன்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, கார்த்திகை 19
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ திருதியை – Dec 03 01:09 PM – Dec 04 01:10 PM

சுக்ல பக்ஷ சதுர்த்தி – Dec 04 01:10 PM – Dec 05 12:49 PM

நட்சத்திரம்

பூராடம் – Dec 03 04:42 PM – Dec 04 05:14 PM

உத்திராடம் – Dec 04 05:15 PM – Dec 05 05:26 PM

கரணம்

கரசை – Dec 04 01:13 AM – Dec 04 01:10 PM

வனசை – Dec 04 01:10 PM – Dec 05 01:03 AM

பத்திரை – Dec 05 01:03 AM – Dec 05 12:49 PM

யோகம்

கண்டம் – Dec 03 03:08 PM – Dec 04 01:56 PM

வ்ருத்தி – Dec 04 01:56 PM – Dec 05 12:27 PM

வாரம்

புதன்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:23 AM
சூரியஸ்தமம் – 5:56 PM

சந்திரௌதயம் – Dec 04 8:56 AM
சந்திராஸ்தமனம் – Dec 04 8:49 PM

அசுபமான காலம்

இராகு – 12:10 PM – 1:36 PM
எமகண்டம் – 7:50 AM – 9:16 AM
குளிகை – 10:43 AM – 12:10 PM

துரமுஹுர்த்தம் – 11:46 AM – 12:33 PM

தியாஜ்யம் – 01:19 AM – 02:56 AM

சுபமான காலம்

அமிர்த காலம் – 12:19 PM – 01:57 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:48 AM – 05:36 AM

ஆனந்ததி யோகம்

ஸ்ரீவச்சம் Upto – 05:14 PM
வஜ்ரம்

வாரசூலை

சூலம் – North
பரிகாரம் – பால்

சூர்யா ராசி

சூரியன் விருச்சிகம் ராசியில்

சந்திர ராசி

டிசம்பர் 04, 11:19 PM வரை தனுசு ராசி, பின்னர் மகரம்

புதன்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

04-12-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். ஆராய்ச்சிப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் காணப்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அனுபவங்கள் உண்டாகும்.
கிருத்திகை : மேன்மை ஏற்படும்.

ரிஷபம்

எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்கவேண்டும். பக்தி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.
ரோகிணி : புரிதல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கலைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : பொருளாதாரம் மேம்படும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மகம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரம் : முடிவுகள் கிடைக்கும்.
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.

கன்னி

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.

துலாம்

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு நிறம்

சித்திரை : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் : தெளிவுகள் பிறக்கும்.

விருச்சிகம்

முயற்சியில் அலைச்சலும் அனுபவமும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அனுபவம் அதிகரிக்கும்.
அனுஷம் : சுபிட்சம் உண்டாகும்.
கேட்டை : அனுகூலம் உண்டாகும்.

தனுசு

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : மதிப்பளித்து செயல்படவும்.

மகரம்

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : சுதந்திரம் அதிகரிக்கும்.

கும்பம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : சாதகம் உண்டாகும்.
சதயம் : குழப்பங்கள் குறையும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

மீனம்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சாதகம் உண்டாகும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.

ஜோதிட ஆலோசனைக்கு நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN +919942285750

error: Content is protected !!