17/01/25 இன்றைய ராசிபலன்கள்

17-01-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, தை 4நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Jan 17 04:06 AM – Jan 18 05:30 AM

கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Jan 18 05:30 AM – Jan 19 07:31 AM

நட்சத்திரம்

மகம் – Jan 16 11:16 AM – Jan 17 12:44 PM

பூரம் – Jan 17 12:45 PM – Jan 18 02:51 PM

கரணம்

பவம் – Jan 17 04:06 AM – Jan 17 04:43 PM

பாலவம் – Jan 17 04:43 PM – Jan 18 05:30 AM

கௌலவம் – Jan 18 05:30 AM – Jan 18 06:26 PM

யோகம்

சௌபாக்யம் – Jan 17 01:05 AM – Jan 18 12:56 AM

சோபனம் – Jan 18 12:56 AM – Jan 19 01:15 AM

வாரம்

வெள்ளிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:42 AM
சூரியஸ்தமம் – 6:17 PM

சந்திரௌதயம் – Jan 17 9:21 PM
சந்திராஸ்தமனம் – Jan 18 9:50 AM

அசுபமான காலம்

இராகு – 11:03 AM – 12:29 PM
எமகண்டம் – 3:23 PM – 4:50 PM
குளிகை – 8:09 AM – 9:36 AM

துரமுஹுர்த்தம் – 09:01 AM – 09:47 AM, 12:53 PM – 01:39 PM

தியாஜ்யம் – 09:27 PM – 11:11 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:06 PM – 12:53 PM

அமிர்த காலம் – 10:11 AM – 11:53 AM

பிரம்மா முகூர்த்தம் – 05:06 AM – 05:54 AM

ஆனந்ததி யோகம்

காரணம் Upto – 12:44 PM
ஸித்தி

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் மகரம் ராசியில்

சந்திர ராசி

சிம்மம் (முழு தினம்)

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை

06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்

மாலை

03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

17-01-2025 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : நெருக்கடியான நாள்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அக்கம், பக்கம் வீட்டார்கள் ஆதரவாக இருப்பார்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உருவாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் பிறக்கும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

எதிர்பார்த்த சில வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தன வரவுகள் சாதகமாக இருக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

சிம்மம்

தன வருவாயில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்

மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் சில மாற்றம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.

துலாம்

பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : ஒத்துழைப்பான நாள்.

விருச்சிகம்

உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : குழப்பங்கள் குறையும்.
அனுஷம் : தாமதம் குறையும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மூலம் : தெளிவுகள் பிறக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

மகரம்

விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

உத்திராடம் : நம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : விமர்சனங்கள் மறையும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.

கும்பம்

எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியம் நடைபெறும். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சதயம் : ஆதரவு மேம்படும்.
பூரட்டாதி : திறமை வெளிப்படும்.

மீனம்

கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரிய சித்தி ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல் நிறம்

பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : காரியசித்தி ஏற்படும்.
ரேவதி : மாற்றமான நாள்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம் ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN+919942285750*

error: Content is protected !!