இன்றைய ராசிபலன்கள் 24/09/2024.

இன்றைய ராசிபலன்கள்.

24-09-2024 செவ்வாய்க்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

24-09-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, புரட்டாசி 8
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை.

திதி.

கிருஷ்ண பக்ஷ சப்தமி – Sep 23 01:50 PM – Sep 24 12:39 PM

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி – Sep 24 12:39 PM – Sep 25 12:11 PM

நட்சத்திரம்.

மிருகசீரிடம் – Sep 23 10:07 PM – Sep 24 09:54 PM

திருவாதிரை – Sep 24 09:54 PM – Sep 25 10:23 PM

கரணம்.

பவம் – Sep 24 01:09 AM – Sep 24 12:39 PM

பாலவம் – Sep 24 12:39 PM – Sep 25 12:19 AM

கௌலவம் – Sep 25 12:19 AM – Sep 25 12:11 PM

யோகம்.

வ்யதீபாதம் – Sep 24 03:09 AM – Sep 25 01:26 AM

வரியான் – Sep 25 01:26 AM – Sep 26 12:17 AM

வாரம்.

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:12 AM
சூரியஸ்தமம் – 6:11 PM

சந்திரௌதயம் – Sep 24 11:55 PM
சந்திராஸ்தமனம் – Sep 24 12:01 PM

அசுபமான காலம்.

இராகு – 3:11 PM – 4:41 PM
எமகண்டம் – 9:12 AM – 10:41 AM
குளிகை – 12:11 PM – 1:41 PM

துரமுஹுர்த்தம் – 08:36 AM – 09:23 AM, 10:59 PM – 11:47 PM

சுபமான காலம்.

அபிஜித் காலம் – 11:47 AM – 12:35 PM

அமிர்த காலம் – 01:09 PM – 02:44 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்.

ராக்ஷசம் Upto – 09:54 PM
சரம்

வாரசூலை.

சூலம் – North
பரிகாரம் – பால்.

செவ்வாய்க்கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – செவ் – அசுபம்
07:00 – 08:00 – சூரி – அசுபம்
08:00 – 09:00 – சுக் – சுபம்
09:00 – 10:00 – புத – சுபம்
10:00 – 11:00 – சந் – சுபம்
11:00 – 12:00 – சனி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – குரு. – சுபம்
01:00 – 02:00 – செவ் – அசுபம்
02:00 – 03:00 – சூரி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சுக் – சுபம்
04:00 – 05:00 – புத. – சுபம்
05:00 – 06:00 – சந் – சுபம்
06:00 – 07:00 – சனி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

24-09-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறுகிய தூர பயணங்களால் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு மேம்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : மதிப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.

மிதுனம்

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். மனதளவில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மிருகசீரிஷம் : மோதல்கள் நீங்கும்.
திருவாதிரை : சூட்சமங்களை அறிவீர்கள்.
புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.

கடகம்

பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குலதெய்வம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன வரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : சேமிப்பு குறையும்.
பூசம் : பயணங்கள் கைகூடும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.

சிம்மம்

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலகலப்பான சூழ்நிலை மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரம் : நிம்மதியான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

கன்னி

மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : உதவிகள் சாதகமாகும்.

துலாம்

எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். பகை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : மாற்றம் ஏற்படும்.
சுவாதி : தொடர்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.

விருச்சிகம்

இனம்புரியாத சிந்தனைகளால் மன உளைச்சல் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : வாதத்தை தவிர்க்கவும்.
கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

தனுசு

தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் மேம்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கிளிபச்சை நிறம்

மூலம் : லாபகரமான நாள்.
பூராடம் : கருத்து0 வேறுபாடுகள் குறையும்.
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.

மகரம்

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சுமூகமான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

வியாபாரத்தில் சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.

மீனம்

பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
உத்திரட்டாதி : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.