முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி !
சென்னை 20 அக்டோபர் 2024 தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘ Return of the Dragon – Home Edition’ எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமான Music Concert ஐ நடத்தினார்.
Torque Entertainments நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த Music Concert க்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற்றிருந்த ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிபூரணமான ஒத்துழைப்பை இலவசமாக வழங்கியது.
இசை நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்களின் பாதுகாப்பிற்கும், பயணத்திற்கும் திட்டமிட்டு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்ததால் .. ‘நிகழ்ச்சியை எந்தவித தடங்கலும் இல்லாமல் உற்சாகமாக ரசித்து அனுபவிக்க முடிந்தது’ என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.