சொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்.
சென்னை : 20 அக்டோபர் 2020
Sonnathu Neethaana Cover Song Youtube Link:
இந்த பாடலை உருவாக்கியது குறித்து செந்தில்குமரன் கூறும்போது, “இந்த பாடல் என் அம்மா எப்போதும் விரும்பி பாடக்கூடிய பாடல். அதனால் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை நானும் ரசித்துக் கேட்டுள்ளேன். தற்போது இந்தப் பாடலுக்கான கவர் ட்ராக்கை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு காரணம் இந்த பாடலின் வழியாக ஒரு செய்தியை சொல்ல விரும்பினேன்.
பொதுவாகவே இந்த பாடலை கேட்கும்போது, ஏதோ ஒரு சோகப்பாடல் என்பது தான் பலரின் மனதிலும் தோன்றும். ஆனால், தான் இறந்து விட்டால் அதை நினைத்துக்கொண்டே, தன் மனைவி அவள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. தனக்கு பிடித்த இன்னொருவரை மறுமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை சொல்லியிருக்கும் பாடலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
கடந்த பல வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நிவாரண உதவிகள் செய்வதற்காக களத்தில் இறங்கியபோது, பல விதவை பெண்மணிகளின் நிலையை நேரில் கண்டவன் என்கிற முறையில், இந்த பாடலை மீள் உருவாக்கம் செய்து எங்கள் சமுகத்திற்கு ஒரு செய்தியினை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் பாடலின் முடிவில் “ஒரு புது தொடக்கம் எப்போதும் சாத்தியமானது” என்று முடித்துளோம் என்று கூறுகிறார் செந்தில்குமரன்.
Related posts:
தமிழ் திரைப்பட உலகில் நுழைய தயாராகும் லண்டன் பாடகர் பிஸ்வஜித்துடன் கைகோர்க்கும் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்.
புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் ’மார்கழியில் மக்களிசை’- இயக்குநர் பா. இரஞ்சித்.
சோனி மியூசிக் பிரம்மாண்டமாக ‘காண்டு கண்ணம்மா’ ஒரு சிங்கிள் ட்ராக் ஒன்றை வெளியிடுகிறது
‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – நடிகை பாடகியுமான ஸ்ருதிஹாசன் உற்சாகம்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ திரைபபட சிங்கிள் ட்ராக் வெளியீடு!!
லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !
ஏ.எச்.காஷிஃபின் அல்லா பாடலுக்கு வரவேற்பு
இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் !
கொரோனாவை ஒழிக்க களத்தில் இறங்கினார் நடிகர் அஜித்குமார்..!
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!!

