கொரோனாவை ஒழிக்க களத்தில் இறங்கினார் நடிகர் அஜித்குமார்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நடிகர் அஜித்குமார்…

அஜித்குமார் தலைமையிலான தக் ஷா என்ற அறிவியல் குழு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த குழு தமிழக அரசுடன் இணைந்து நோய் தொற்று தங்காமல் இருக்க சுமார் 3 லட்சம் / ச கிமீ கொண்ட பரப்பளவு பகுதியை கவர் செய்து கிட்டத்தட்ட 900 லிட்டர் நோய்த் தொற்றை தவிர்க்கும் மருந்துகளை தெளித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால், தக்‌ஷா குழுவின் டெக்னிக்கல் அட்வைஸரான அஜித்குமார்  அவ்வப்போது குழுவுடன் செயல்பட்டு ஆலோசனை வழங்கி வருகிறாராம்.

அஜித்குமாரின் இந்த செயல் தற்போது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

அஜித்குமாரின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!