நடிகை காஜல் அகர்வால் நடித்த ஏழு திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.
சென்னை 18 மே 2021
நடிகை காஜல் அகர்வால் நடித்த ஏழு திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.
தான் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெளி வராமல் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் மிகவும் சோகத்தில் ஆழ்த்து உள்ளாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் நடிகர் ஜெயம்ரவி உடன் நடித்த கோமாளி திரைப்படம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையில் வெளிவந்தது.
இதனை அடுத்து ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் திரைக்கு வெளிவராமல் முடங்கிப் போய் உள்ளது.
அவர் நடித்த பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி நீண்ட நாட்களாக திரைக்கு வெளி வராமல் முடங்கி உள்ளது.
ஹேய் சினாமிகா என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மீதமுள்ள அந்த திரைப்படத்தின் காட்சிகளை நடித்து முடித்து கொடுத்தார்.
இருப்பினும் அதுவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப் பட்டிருப்பதால் திரைப்படங்கள் வெளிவராமல் முடங்கி உள்ளது.
இதே போல் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படமும் பாதியில் நிற்கிறது.
இயக்குனர் ஷங்கர் தெலுங்கு, இந்தி திரைப்படங்களை இயக்க உள்ளதால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கில் நடிகை திரிஷா நடிக்காமல் விலகிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், இப்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலால் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இரண்டு தமிழ் திரைப்படங்களிலும் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடிகை காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அந்தப் திரைப்படங்களும் சில பிரச்சினைகளால் முடங்கி கிடைக்கிறது.
தான் நடித்துள்ள படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் மிகவும் சோகத்தில் உள்ளாராம்.











