“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் – ஒரு சொல்லப்படாத காவியம்!!“ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!
“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் – ஒரு சொல்லப்படாத காவியம்!!“ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!! சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில், பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு, காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.
ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது. ‘ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்’ என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இப்படம் இருக்குமென்பதைக் குறிக்கிறது.
மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர், அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது. இயக்குநர் அவதூத் இயக்கும் ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.
கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.
தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன. “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும்.
மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும்.
Related posts:
இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு “ஜெய் ஹனுமான்” படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளார் !!
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள பாடல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’!!
ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!!
நடிகர் சூர்யா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஜெய் பீம் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
கான்ஸ் திரைப்படவிழாவில் வெளியிடப்பட்ட இயக்குனர் பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது!!
இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் ‘ஹனுமான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது !!
பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் – நடிகை ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!
ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா கே.கே. நகரில் பிரமாண்டமான ஷூட்டிங் ஹவுஸ்”திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்..

