மூன்றாவது முறையாக தேசிய விருது பெற்ற நடிகர் இசையமைப்பாளர் ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
மூன்றாவது முறையாக தேசிய விருது பெற்ற நடிகர் இசையமைப்பாளர் ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
18 தேதி அன்று அறிவிக்கப்பட்ட 72 வந்து தேசிய விருதுகளில் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரைப் பின்னணி பாடகர் வேல்முருகன் நேரில் சந்தித்து புத்தம் புது நாணயங்களினால் உருவாக்கப்பட்ட காசு மாலையை அணிவித்துப் பாராட்டி வாழ்த்தினார்.
அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பிரசாதத்தையும் வழங்கினார்.
அப்போது பிரபல இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் உடன் இருந்தார்.











