ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” புகழ் ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” !

சென்னை : 24 டிசம்பர் 2020

தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றி படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில்,

அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்ட படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

எஸ் டி ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு “பத்து தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களும் திரையுலகில் ஒன்றாக பயணத்தை தொடங்கியவர்கள்.

நீண்ட காலத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பது இருவருக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கூறியதாவது…

ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது.

எஸ் டி ஆர் அதீதமான சுறுசுறுப்புக்கும் உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான அதிரடியான தலைப்பை தேடினோம்.

பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதிசெய்யப்பட்டது.

ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள்.

கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார்.

எங்களை பொறுத்தவரையில் அவர் எங்கள் குடுமபத்தில் ஒருத்தர். “பத்து தல” படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது.

அவரது திரை வாழ்வில் இப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்றுத்தரும் படமாக இருக்கும். எனது முதல் தயாரிப்பான “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தை இயக்கிய காலத்திலிருந்து, இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் நானும் பல்லாண்டுகளாக நல்லதொரு நட்புறவினை பேணி வருகிறோம்.

திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல ஆச்சர்யங்களும் இணையவுள்ளது.

அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.