இயக்குனர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழக முதல்வர் நலம் விசாரித்தார்!!

சென்னை 10 செப்டம்பர் 2022 இயக்குனர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழக முதல்வர் நலம் விசாரித்தார்!!

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா வயது 81 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

வயது மூப்பின் காரணமாக நுரையீல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை அளித்த பின் அவர் குணமடைந்துவிட்டதாகவும் , வீட்டில் ஓய்வு அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் .

வயதானாலும் எப்போதும் துடிப்புடன் உள்ள பாரதிராஜா சமீபத்தில் திருச்சிற்றம்பலம் , குற்றமே குற்றம், , தி வாரியர் , ஈஸ்வரன் , ராக்கி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ள வள்ளிமயில்  குற்றப்பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் திரையில் தோன்றி ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றார்.

கவிஞர் வைரமுத்து அமைச்சர் நேரு அவர்கள் உடன் இருந்தனர்

error: Content is protected !!