கோவை ESI மருத்துவமனையில் கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை நேரில் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர்.

சென்னை 31 மே 2021

கோவை ESI மருத்துவமனையில் கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை நேரில் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர்.

தமிழகத்தில் கோவை ESI மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை நலம் விசாரித்தா தமிழக முதலமைச்சர் ஒருவர் சந்திப்பது இந்தியாவிலே  முதல் முறையாகும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை  அதி வேகமாக  பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை கடந்த எட்டு நாட்களாக குறைந்து வருகிறது.

சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தொழில் நகரமான கோவையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

இதனை அடுத்து தமிழக முதல்வர் மூன்று மாவட்டங்களில் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

(30-05-21)அன்று காலை  ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார்.

அங்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு எளிதாக அழைத்து செல்வதற்காக 50 இன்னோவா கார்கள் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் முதல்முறையாக எந்த முதல்வரும் கொரோனா நோயாளிகளை வார்டுக்கு நேரில் சென்று அவர்களின் நலம் குறித்து கேட்டறிந்ததில்லை.

முதல் முறையாக நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ESI மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வார்ட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் தமிழக முதல்வர்.

அங்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வழங்கப்பட்டும் வரும் சிகிச்சையை பற்றி கேட்டறிந்தார்.

மேலும்  3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர்.

error: Content is protected !!