‘தி ஹிடன் புரோடெக்டர்’ திரைப்பட விமர்சனம்
Voice Cast & Characters :- Zhang Wei, Patrick Freeman, Enzi Cui, Jingren He, Tan Xiao, Zhang Bingjun, Wang Bingbing, and Nie Jixuan.
Director: Huida Lin
Screenwriters/Writers: Jiang Lin, Qin Wan, and Rachel Xu, Wang Yifei.
Music / Composers: Xueran Chen (with Li Zhiping and Rick Jay Glen)
Producer: Shang Linlin
Production Company Fantawild Animation.
Rating :- 04./05.
PRO :- SARAVANAN. KARTHIK.
குழந்தைகளுக்கான கார்ட்டூன் திரைப்படம் என்ற எல்லையைத் தாண்டி, குடும்ப குட்டிகளுடன் அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய தரமான ஒரு அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘தி ஹிடன் புரோடெக்டர்’.
சீன நாட்டுப்புறக் கதைகள், மாய உலகம், நட்பு, பொறுப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த ‘தி ஹிடன் புரோடெக்டர்’ பயணப்படுகிறது.
கதையின் மையத்தில் இருக்கும் பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஆகிய கதாபாத்திரங்கள் அனைவருக்கும் எதிர்பாராத விதமாக மாய சக்திகளைப் கிடைக்கிறது.
கிடைக்கப்பெற்ற அந்த மாய சக்திகள் அவர்கள் அனைவரையும் மனித உலகத்தையும் மந்திர உலகத்தையும் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய சாகசப் பயணத்துக்குள் இழுத்துச் சென்று விடுகிறது.
சகோதர சகோதரிகளின் பாசம், அன்பு பொறாமை, தியாகம் போன்ற அனைத்து உணர்வுகளையும் குழந்தைகள் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அந்த திரைப்படத்தின் அனிமேஷன் மட்டுமே மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
கலர்ஃபுல்லாகவும் வண்ணமயமாகவும் காட்சிகள், மாய உலகத்தின் வடிவமைப்பு, பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகள் மற்றும் மிகவும் உயிரோட்டமான கதாபாத்திர வடிவமைப்புகள் அனைத்து பார்வையாளர்களை முழுமையாக அந்த மாய உலகிற்குள் ரசிகர்களை ஒகடத்தி சென்று விடுகிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 3D அனிமேஷன் தொழில்நுட்பம் அனைத்து காட்சிகளுக்கு கூடுதல் கலர்ஃபுல்லான அழகையும் திரைப்படத்தில் வழங்கி இருக்கிறார்கள்.
வசன உச்சரிப்பு அனிமேஷன், இசை மற்றும் பின்னணி இசை ஒலிப்பதிவு கதையின் உணர்வுகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
நகைச்சுவை காட்சிகள் குழந்தைகளை கவரக்கூடிய அளவிற்கு மிகவும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் குடும்ப திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் மனதையும் தொடுகின்றன.
இரண்டு மணி நேர ஓட்டத்தில் எங்கும் எதிலும் துளி கூட சலிப்பு ஏற்படாமல் திரைக்கதையை கொண்டு செல்வது மிகவும் பாராட்டக் கூடியது.
சீனாவில் உள்ள பாரம்பரியக் கதைகளில் இடம்பெறும் ‘நியான்’ புராணக் கூறுகளை அதிநவீன அனிமேஷன் வடிவத்தில் மாற்றியமைத்திருப்பது திரைப்படத்திற்கு தனி தத்துவமான அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
வழக்கமான அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்படங்களை போல் இல்லாமல் இந்த ‘தி ஹிடன் புரோடெக்டர்’ ஒரு புதிய அனுபவம் கொடுக்கிறது.
,தி ஹிடன் புரோடெக்டர்’ வெறும் கார்ட்டூன் திரைப்படம் அல்ல; கற்பனை, ஒற்றுமை நட்பு, பாசம், அன்பு பொறாமை, தியாகம்
குடும்ப பாசம் மற்றும் வீரத்தை கொண்டாடும் வண்ணமயமான திரை விருந்துதான் இந்த ‘தி ஹிடன் புரோடெக்டர்’ திரைப்படம்
குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் குடும்பங்களுடன் இணைந்து ரசிக்கக்கூடிய, தொழில்நுட்ப ரீதியாகவும் கதை ரீதியாகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மிகவும் தரமான எந்த இடத்திலும் முகம் சுளிக்காமலும் போர் அடிக்காமலும் இருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த ‘தி ஹிடன் புரோடெக்டர்’.
கற்பனையும் கலாச்சாரமும் கைகோர்த்த கண்கவர் அனிமேஷன் அனுபவம் உள்ள திரைப்படம்.
மொத்தத்தில், இந்த ‘தி ஹிடன் புரோடெக்டர்’ குழந்தைகளுடன் கொண்டாட கூடிய ஒரு மிகச் சிறந்த அனிமேஷன் திரைப்படம்.










