நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன் !
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன் !விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே! ஆனால், அந்த விளையாட்டே உங்களுக்கு வினையாக மாறினால்? அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தமிழ் த்ரில்லர் சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது.
இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பகிர்ந்து கொண்டதாவது,
தொடர் குறித்து நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, “சுதந்திரமான கேமிங் டெவலப்பர் பெண் கதாபாத்திரத்தில் நடித்துப்பது எனக்கு புது அனுபவம். த்ரில்லர் ஜானரில் அமைக்கப்பட்ட என் கதாபாத்திரம் எனக்கே எதிராக திரும்பும்போது அவளால் தப்ப முடியவில்லை. ரியாலிட்டி அவளுக்கு சவாலானதாக உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் தீவிரம், ஆழத்தைக் கொண்டு வந்த இயக்குநர் ராஜேஷூடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்ததன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய முடியும்” என்றார்.
அவசரம், பயம், மனிதத்தன்மை, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் டிரெய்லரில் உள்ளது. கேமில் ஒவ்வொரு க்ளிக்கும் உங்கள் சாய்ஸ். ஒவ்வொரு மாஸ்க்கும் உண்மையை மறைத்துள்ளது. ஒவ்வொரு உண்மையும் கேமை மாற்றும். இந்த கேம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என்பதில்லை, நீங்கள் உருவாக்கிய உலகில் உங்களால் வாழ முடிகிறதா என்பதைப் பற்றியது!
நெட்ஃபிலிக்ஸில் அக்டோபர் 2 அன்று ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பாருங்கள்!
நெட்ஃபிலிக்ஸ் பற்றி:
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.
Related posts:
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் அறிமுகம் !!
நடிகை’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!
ஓடிடி தளத்தில் “தந்துவிட்டேன் என்னை” – ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது!
’சிங்க்’ திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.!!
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!
’டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 தேதி அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது !!
வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!
குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, டிசம்பர் 21, 2024 அன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது !!

