தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி ராமசாமி.
நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் இயக்குநர் ராம நாராயணனின் மகன் தயாரிப்பாளர் முரளி ராமசாமி அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில்…
என்னை தலைவராக தேர்ந்தெடுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
தேர்தலுக்கு முன்புதான் அணிகள் இப்போது எந்த அணியும் கிடையாது.
இனிமேல் எல்லோரும் ஒரே அணிதான்.
கொரோனா ஊரடங்கால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.
தமிழ் சினிமா இதனால் திரையுலகம் பின்தங்கியுள்ளது.
எனவே அனைத்து தயாரிப்பாளர்களையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம்.
தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
வெளியிட முடியாமல் தேங்கி கிடக்கும் படங்களை திரைக்கு கொண்டு வர பாடுபடுவோம்.
தற்போதுள்ள அரசு, இனி வரப்போகும் புதிய அரசு ஆகியவற்றுடன் நல்ல உறவை வளர்த்து அரசு தரப்பில் இருந்து அனைத்து சலுகைகளையும் பெறுவோம்.” என்றார்.












