எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் அண்ணாவை காட்ட மறுத்தார்கள்- திருநாவுக்கரசர்
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் அண்ணாவை காட்ட மறுத்தார்கள்- திருநாவுக்கரசர்சென்னை 24 பிப்ரவரி 2024 நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’.
அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நேசமுரளி பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம்.
இன்று கூட பாடல்களையோ படத்தின் காட்சிகளையோ திரையிடக்கூடாது என்று அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
பொள்ளாச்சிக்கே சென்று மூன்று மாதங்கள் தங்கி இருந்தேன்.
அதனால் அனுமதிக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி மறுபரிசீலனை கோருங்கள், நடிகை கவுதமி தலைமையில் 15 பேர் திரைப்படத்தைப் பார்த்து முடிவு செய்வார்கள் என்றார்கள்.
தியேட்டரில் சென்சார் உறுப்பினர்களுடன் படம் பார்க்க நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறேன்.
அவர்கள் யாரும் என் வாதத்தை கேட்கும் மனநிலையில் கூட இல்லை.
எங்கு பார்த்தாலும் பாலியல் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஒரு நாள் பத்திரிகையிலோ டிவியிலோ இது போன்ற செய்திகள் வரும்.
ஆனால் தற்போது அது போன்ற செய்தி இல்லாத நாளே இல்லை எனலாம்.
இப்படத்திற்கு நான் இயக்குநர் மட்டும் இல்லை தயாரிப்பாளரும் கூட என்பதால் படத்தை எப்படியாவது ரீலிஸ் செய்துவிட வேண்டும் என முடிவு செய்து, அவர்கள் சொன்ன 109 கட்-களுக்கு உடன்பட்டு, எண்ட் கார்டை தூக்கி, டைட்டிலை பொள்ளாச்சி என்று வைக்காமல் மாற்றி, யூனியனில் மற்றொரு டைட்டிலை ரிஜிஸ்டர் செய்து, மீண்டும் சென்சார் சர்டிபிகேஷனுக்கு விண்ணப்பித்தேன்.
என்னுடைய கதைகள் எல்லாமே பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள் தான்.
அதில் என்னுடைய கதையும் ஒன்று. அதில் 10 கதைகளை அய்யா ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருக்கிறார்கள். அவருக்கு நன்றி.
பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசும் போது…
இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினைகளுக்காகத் தான் நான் சினிமாவுக்கே வரவில்லை.
இவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி மற்றும் மணிப்பூர் இவைகளை நாங்களும் பேசி இருக்கிறோம்.
இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது.
சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன்.
இந்த பொள்ளாச்சி மேட்டருக்கே வருகிறேன்.
வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள்.
சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது.
குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன்.
இயக்குநர் நேசமுரளியின் கோபமும் வேகமும் புரிகிறது.
இன்னும் இதுமாதிரி சம்பவம் குறைஞ்ச பாடு இல்ல… கூடத் தான் செய்யுது…
இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்படுங்கள்.
அதற்கு நக்கீரனும் துணை நிற்கும் என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது…
எல்லோருக்கும் வணக்கம்.
இரண்டு புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது…
இவ்விழாவிற்கு எங்களை அழைத்த நேசமுரளிக்கு மனமார்ந்த நன்றி.
அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும் போது தாக்குதல் துவங்கிவிடுகிறது.
இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன்.
இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிடக் கழகத்தை தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல..
கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை.
உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம்.
ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்த்து. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள்.
எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு, மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கத் தலைவரும், மற்றும் சன் செய்தி பத்திரிகையாளருமான டாக்டர் எஸ்.என்.பிரபுதாசன் பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். நேசமுரளி எப்போதும் கொந்தளிப்போடு தான் இருப்பார்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தான் நாம் சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டியது இருக்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் போது…
எங்கெல்லாம் அதிகார அத்துமீறல் நடக்கிறதோ அதைத் தோலுரித்துக் காட்டி அவர்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் மகத்தான பணியை இயக்குநரும் தயாரிப்பாளரும் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இதை அங்கீகரிக்கும் சமூகமாக, அரசாக, சென்சார் போர்டாக சமகால சமூகம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.
தமிழ்நாட்டில் நடந்ததை அப்படியே ராவாக திரைப்படத்தில் காட்டி எடுத்ததால் சென்சார் போர்டு அனுமதி கொடுக்கவில்லை.
எனவே அண்ணன் செல்வமணி மற்றும் நக்கீரன் கோபால் அவர்கள் கூறியதை போல சற்று வளைந்து கொடுத்து தான் நீங்கள் மக்களிடம் கூற விரும்பும் கருத்தை கூற வேண்டும்.
இந்திய மார்க்சிஸ்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது…
‘கற்புபூமி’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நேசமுரளி சினிமாவிற்கும் அரசியலுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பொருளாதார இழப்புகள் என்பது பெரிதாக இருக்காது.
நீங்கள் ஒரு படத்தை எடுப்பதோடு உங்கள் நோக்கம் முழுமையடைந்து விடாது.
அவர்கள் எந்தப் படம் ஓடவேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ அந்தப் படம் தான் ஓடுகிறது. மற்ற படங்களை ஓடவிடமாட்டார்கள்.
கருத்துள்ள நல்ல படம் ஓட மாட்டேன் என்கிறது.
நன்றாக ஓடும் படங்களில் கருத்தே இல்லை. நமக்குத் தேவை எல்லாம் நன்றாக ஓடக் கூடிய கருத்துள்ள படங்கள். அப்படங்களை எப்படி மக்களிடம் சென்று சேர்ப்பது என்பதை யோசியுங்கள்.
இருப்பினும் இப்படி ஒரு கருத்தைப் பேச வேண்டும் என்று எண்ணிய உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள்.
இயக்குநர் நேசமுரளி இது போன்ற சமூக அக்கறை கொண்ட பல படங்களை உருவாக்கி வெற்றி பெற்றிட வாழ்த்துகள்.
அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசும் போது…
நல்ல பாட்டு கேட்க வந்தேன்.
மேடையில் முழங்கு திருவிக போல் என்றே அப்பாடல் பொது இடங்களில் ஒலித்த்து.
சென்சார் போர்டில் அரசியல் கட்சிக்காரர்கள் இருக்கக்கூடாது என்பது என் எண்ணம்.
இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது. படத்தினை தர்மத்திற்கு எடுக்க முடியாது.
உங்கள் போராட்டத்தையும் உங்கள் துணிவையும் பாராட்டுகிறேன்.
ஏனென்றால் நீங்கள் சினிமாவிலிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள், உங்கள் இலக்கு வெற்றி என்றால் சில ராஜதந்திரங்களோடு செயல்படுங்கள் என்பதே எங்கள் அறிவுரை.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது….
அனைவருக்கும் பணிவான வணக்கம். காலையில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள்.
வணிக நோக்கில் படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்காமல், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம், ஆனால் சமூகச் சிக்கல்கள் குறித்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் வகையில், இளைய, புதிய தலைமுறையினரை முற்போக்காக சிந்திக்கத் கூடிய உந்துதலை, தூண்டலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற வேட்கை உள்ளவர்.
படமாக்கி பணமாக்க வேண்டும் என்பதல்ல அவரின் நோக்கம்.
அவர் உள்வாங்கி இருக்கும் அரசியல் கோட்பாடு தான் அவரை துணிவாக இருக்கும்படி இயங்கும்படி தூண்டிக்கொண்டும் இயக்கிக் கொண்டும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
பொள்ளாச்சியில் நடந்தது அவ்வளவு குரூரமானது.
அப்படிப்பட்ட குரூரமான நிகழ்வை படைப்பாக்க வேண்டும் என்று முடிவு செய்து துணிச்சலான முடிவு.
90களில் ஒரு கவிதை எழுதினேன். ”எதனையும் எதிர் கொள்ள இரு விழிப்பாய்,.
பெரியார் சொல்வார், “நீ போராடிப் போராடி உரிமையை வென்றெடுப்பாய், பாராளுமன்றத்தில் பேசி அதற்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை இயற்றுவாய், ஆனால் நீ இயற்றும் சட்டமே செல்லாது என்று சொல்லுகிற இடத்தில் அவன் இருப்பான்” என்று சனாதன சக்திகளை அப்போதே தோலுரித்துக் காட்டியவர் தந்தை பெரியார்.
ஆனாலும் கூட அதை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்றால் வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும்.
இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.
‘கற்பு பூமி’ என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது…? இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை எங்கே உருவாகிவிடப் போகிறது.
Related posts:
மக்கள் செல்வன் நடிக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும் படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு
தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை லக்ஷ்மி மஞ்சு.
ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒவ்வொரு தமிழரும் பொறுப்பேற்க வேண்டும் – இயக்குனர் பேரரசு ஆவேசம்!
இப்படி இருந்தா ரஜினிகாந்த் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்..? – டி.ராஜேந்தர்
ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் ஹாசன் உற்சாகம்
“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.!
ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் “மாமனிதன்” திரைப்பட நன்றி அறிவிப்பு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!
தமிழ் திரைப்பட உலகில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’ – இயக்குநர் மிஷ்கின் பாராட்டு
“பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்” மற்றும் “திருமுருகன்” இருவரும் தயாரிப்பாளர்களாக களமிறங்கும் ” “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” இசை வெளியீடு

