நேரம்’ & ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்தில் பஹத் பாசில் & நயன்தாரா ஜோடியை இணையும் பாட்டு.

சென்னை : 21 டிசம்பர் 2020

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய திரைப்படங்கள் வெளி வர தயாராக உள்ளன.

தமிழ் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ & தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் மலையாளத்தில் ‘பாட்டு’ என்ற பெயரிடப்பட்ட ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

‘நேரம்’ & ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

error: Content is protected !!