காலம் மாறினாலும் களைகட்டும் கரகாட்டம்… 37 ஆண்டுகளுக்குப் பின் புதிய தொழில்நுட்பத்தில் மக்கள் நாயகன் ராமராஜன்!

காலம் மாறினாலும் களைகட்டும் கரகாட்டம்… 37 ஆண்டுகளுக்குப் பின் புதிய தொழில்நுட்பத்தில் மக்கள் நாயகன் ராமராஜன்!

சென்னை 01 நவம்பர் 2026 தமிழ் திரைப்பட உலகில் என்றும் அழியாத வெற்றிப் படைப்புகளில் ஒன்றான, மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன தொழில்நுட்ப மெருகேற்றத்துடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தயாராகி வருகிறது.

கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், நகைச்சுவை, காதல், கிராமிய மணம், இசை என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்து.

அன்றைய காலகட்டத்தில் மாபெரும் வசூல் சாதனையைப் படைத்தது.

குறிப்பாக, இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளும் பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

தற்போது, இந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்து, சினிமாஸ்கோப் திரைவடிவம் மற்றும் DTS அதிநவீன ஒலி அமைப்புடன் வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மீண்டும் பெரிய திரையில் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவிருப்பது, அன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் மகிழ்ச்சியாகவும், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையரங்க அனுபவமாகவும் அமையவுள்ளது.

1989-ல் வசூலில் புரட்சி செய்த ‘கரகாட்டக்காரன்’, 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைக் கிளப்ப வருகிறார்!

வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!