இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு இன்று துவங்கியது!
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு இன்று துவங்கியது!தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.
முன்னதாக படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
திரைப்படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாக பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,…
இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
அடுத்ததாக பேசிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி,…
படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.
இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
பின்னர் பேசிய இயக்குனர் ஷரீஃப்,”யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்றார்.
இத்திரைப்படத்தில் கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ‘கலைமாமணி’ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.
ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
Related posts:
மிர்ச்சி சிவா பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் “காசே தான் கடவுளடா” திரைப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது !
இயக்குனர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.!!
இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் நடிப்பில், “ரிலீஸ்” திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தின் இன்று படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது !!
நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா, நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகும் “கோல்மால்” திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது!
நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது !
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக இன்று பூஜையுடன் தொடங்கியது.!!
சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !
நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் “சாரா” இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது !!

