தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் ஒளிபரப்படுகிறது!
தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் ஒளிபரப்படுகிறது!
‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே இப்போது தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்ஷன் என டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பல தருணங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.
இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதி கெல்லி மார்செல் இயக்கியுள்ளார்.
படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.