அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ‘ரத்னம்’ திரைப்படம் வெளியாகிறது !!
அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ‘ரத்னம்’ திரைப்படம் வெளியாகிறது !!
சென்னை 24 ஏப்ரல் 2024 இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் இணைந்து பணியாற்றிய தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அமைந்தது.
அதன் பின் நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் இணைந்து ‘‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளதால் நடிகர் விஷால் ரசிகர்கள் மத்தியில் ரத்னம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புக்குள் ஆகி உள்ளது.
இந்தத் திரைப்படத்தை ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக இணைந்து, அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் ‘எதுவரையோ…’‘ என்ற பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெஈயிடப்பட்டது.
பாடகர் ஹரிகரன் பாடியுள்ள பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற 26 ந் தேதி வெளிவருகிறது.
அமெரிக்காவில் மட்டும் இந்த திரைப்படம் 100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை படக்குழுவினர் அமெரிக்க திரையரங்கு விபரங்களை அறிவித்துள்ளது.











