இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!சென்னை 01 ஜூலை 2024 தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இது அஜித்குமார் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுது போக்கு படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவர்.
‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – த்ரிஷா – ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறும்போது…
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சுப்ரீம் சுந்தர் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் (ஆடைகள்), சுப்ரமணியன் நாராயணன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன் (தயாரிப்பு நிர்வாகி), ஜி ஆனந்த் குமார் (ஸ்டில்ஸ்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்), ஹரிஹரசுதன் (விஎஃப்எக்ஸ்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), மற்றும் ஜிகேஎம் தமிழ் குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.
Related posts:
இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!!
இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில், “டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் – நடிகை ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சென்டிமீட்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டார் இயக்குநர் மணிரத்னம்!
நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.!
பழி தீர்க்கும் வெறியோடு சூப்பர் ஸ்டாரின் இணையத்தை மிரட்டும் நெல்சன் திலிப் குமாரின் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!

