பழி தீர்க்கும் வெறியோடு சூப்பர் ஸ்டாரின் இணையத்தை மிரட்டும் நெல்சன் திலிப் குமாரின் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!
சென்னை 22 ஆகஸ்ட் 2022 பழி தீர்க்கும் வெறியோடு சூப்பர் ஸ்டாரின் இணையத்தை மிரட்டும் நெல்சன் திலிப் குமாரின் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!
சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று ட்விட்டரில் வெளியிட்டனர்.’
சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளதாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
மேலும் ஐஸ்வர்யா ராய் பச்சன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படம் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயலும் குற்றவாளியை ஜெயிலர் தடுப்பதாக இந்த கதை அமையும் என சொல்லப்படுகிறது.
இந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சால்ட் & பெப்பர் லுக்கில் நடந்து வருவது போல் அமைந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த புதிய லுக்கை இணையதளத்தில் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பீஸ்ட் திரைப்படத்தால் பல எதிர்மறை விமர்சனங்களை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சந்தித்து விட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அண்ணாத்தே ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாக அமையவில்லை.
எனவே நெல்சன் திலீப்குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இது மிகவும் முக்கியமான திரைப்படமாக அமையும்.
சன் பிக்சர்ஸ், இன்று ட்விட்டரில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலரின் போஸ்டரை ட்வீட் செய்து, ‘#Jailer begins his action Today!’ இவ்வாறு வெளிப்படுத்தந்தனர்.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022











