அன்பறிவு திரை விமர்சனம் ரேட்டிங் –2.25 /5

.நடிகர் நடிகைகள் – ஹிப்ஹாப் தமிழா அதி, நெப்போலியன், விதார்த், சாய்குமார், தீனா, ஆஷா சரத், காஷ்மிரா, ஷிவானி ராஜசேகர், ஆடுகளம் நரேன், ரேணுகா, அர்ஜெய், சரத் ரவி, முல்லை, சாய் சித்தார்த், மாரிமுத்து,
மற்றும் பலர்.
இயக்கம் – அஸ்வின் ராம்.
ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம்.
படத்தொகுப்பு – பிரதீப் ராகவ்.
இசை – ஹிப்ஹாப் தமிழா.
தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
ரேட்டிங் –2.25 /5
தமிழ் திரைப்பட உலகில் இதுவரை வந்த அனைத்து இரட்டை வேடத்தில் உள்ள கதாநாயகன் திரைப்படங்களையும் பொறுமையாகப் போட்டுப் பார்த்து அவற்றிலிருந்தே கொஞ்சம் கொஞ்சம் காட்சிகளை உருவி, சில பல கிராமத்துக் கதைப் திரைப்படங்களின் காட்சிகளையும் உருவி, இந்தக் கால டிரென்டான சாதி மோதலையும், சேர்த்து அப்படி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் இந்த அன்பறிவு.
இரண்டு ஊர்கள், ஒரு ஊரின பெயர் அரசபுரம், மற்றொன்றின் ஊரின் பெயர் ஆண்டிபுரம்.
அரசபுரத்தின் பெரிய மனிதர் நெப்போலியன்.
மதுரையில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார் நெப்போலியன்.
நெப்போலியனிடம் உதவியாளராக பணிபுரியும் வில்லன் விதார்த், அரசியலில் தனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.
நெப்போலியனின் மகள் ஆஷா சரத், ஆண்டிபுரத்தைச் சேர்ந்த வேற்று சாதிக்காரரான சாய்குமாரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
இதனிடையே வில்லன் விதார்த்தின் நண்பர் சாய் குமார், நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொண்டதால் வில்லன் விதார்த் கோபமடைகிறார்.
சாய் குமார் ஆஷா சரத் தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.
தனது நண்பனான சாய்குமார் திடீரென பெரிய இடத்து மாப்பிள்ளை ஆனதைப் பொறுக்க முடியாத நெப்போலியன் வீட்டு வேலைக்காரரான வில்லன் விதார்த்.
ஒரு அரசியல் செய்து நெப்போலியன், சாய் குமாருக்கு இடையில் பகையை வளர்க்கிறார்.
இதனால் பதவி சாய் குமாருக்கு போக ஆத்திரம் அடையும் விதார்த், நெப்போலியன் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார்.
பின்னர் நெப்போலியன், சாய் குமாருக்கு நடக்கும் ஒரு சண்டையில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு ஊரை விட்டே செல்கிறார் சாய்குமார்.
24 வருடங்களுக்குப் பிறகு சாய்குமார் கனடாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார்.
அவரது மகனாக கல்லூரியில் படிக்கும் இளைஞனாக தம்பி கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி.
இங்கு ஊரில் தாத்தா நெப்பேலியனால் அடிதடி, சண்டை என வளர்க்கப்படும் மற்றொருவர் அண்ணன் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி.
அப்பாவிடம் வளரும் அறிவு எப்படியாவது இந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.
இறுதியில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த அன்பறிவு திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
இரு கதாப்பாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்காதது வருத்தம் அளிக்கிறது.
வேட்டி, சட்டை, கழுத்தில் சில பல நகைகள், நெற்றியில் விபூதி, மதுரைத் தமிழில் நக்கலாகப் பேசினால் கிராமத்தில் வளரும் அண்ணன் கதாநாயகன் ஆதியின் பெயர் அன்பு..
ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட், கலைந்த தலை, கொஞ்சம் ஸ்டைலான ஆங்கிலம் பேசினால் கனடாவில் வளரும் தம்பி கதாநாயகன் ஆதியின் பெயர் அறிவு.
இரண்டிற்கும் முடிந்தவரையில் உடல்மொழி, நடை, பேச்சு என வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார் கதாநாயகன் ஆதி.
அதுதான் திரைப்படத்தின் பெயர் அன்பறிவு.
இரண்டு கதாபாத்திரங்களிலும் ஆக்ஷன், சென்டிமென்ட் என கிடைக்கும் வாய்ப்பில் ஸ்கோர் செய்கிறார் ஆதி.
ஆதியின் மாவீரன் நெப்போலியன் நடித்திருக்கிறார்.
அவருடைய கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்து அசத்தி இருக்கிறார்.
90களில் நடித்த கிராமத்துப் பெரிய மனிதர் வேடத்தில் நெப்போலியன்.
நெப்போலியன் கதாபாத்திரத்தில் ஒரு
எந்த மாற்றமும் இல்லை.
கதாநாயகன் ஆதி என் அம்மாவாக ஆஷாசரத் மிகவும் அருமையாக அந்த கதாபாத்திரத்தை உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ திரைப்படத்தில் மிரட்டியவர் ஆஷா சரத். அவரை கிராமத்து அம்மாவாக மாற்றி அழ விட்டிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் காஷ்மீரா மற்றும் ஷிவானி
கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள், ஒருவர் கதாநாயகி காஷ்மிரா, மற்றொருவர் கதாநாயகி ஷிவானி. அண்ணன், தம்பிகள் இடம் மாறிய பிறகுதான் அவர்களுக்கு யார் ஜோடி என்பது தெரிய வருகிறது.
கனடாவில் இருக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக கதாநாயகி ஷிவானி.
காட்சிகளும் மிகக் குறைவு, நடிக்கவும் வாய்ப்புகள் இல்லை.
இங்கு ஊரில் இருக்கும் ஆதியின் முறைப் பெண்ணாக கதாநாயகி காஷ்மிரா, இவர் ஒரு டாக்டர்.
தாத்தா நெப்போலியன் மீதும், அம்மா ஆஷா சரத் மீதும் மட்டும் அதிக பாசம் வைத்துள்ளவர் அண்ணன்.
அவருக்கு பிரிந்து போன அப்பா பற்றிப் பேசினாலே கடும் கோபம் வரும். ஆனால், கனடாவில் அப்பாவால் வளர்க்கப்பட்ட தம்பி ஆதிக்கு ஒரு கட்டத்தில்தான் அம்மா பற்றிய உண்மை தெரிய வருகிறது.
நடிகர் விதார்த் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக இருந்து இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
விதார்த் திடீரென இப்படி வில்லனாக நடிக்க சம்மதித்ததன் காரணம் என்னவோ ?.
வில்லனாக நடித்த விதார்த் வில்லனாகவே மாறி மிகவும் அருமையாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.
சாய்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும், மற்ற கதையை போன்று கதாபாத்திரங்கள் இருப்பதால் சற்று தொய்வு ஏற்படுகிறது.
அஸ்வின் ராம் இந்த அன்பறிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கதை களம் புதியதாக இல்லையென்றாலும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாரசியமாக எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் ராம்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம் பெறும் கதைகளை போன்று இக்கதையும் இருக்கிறது.
சூர்யா நடித்த வேல் திரைப்படத்தை ரசிகர்களின் நினைவுப்படுத்துவதாக
இருக்கிறது.
ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடலில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்ற வைத்தாலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது.
யுவன் பாடிய ஒரு பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
அன்பால் தான் எதையும் சாதிக்க முடியும் என அண்ணன் அன்புக்கு தம்பி அறிவு எப்படி புரிய வைக்கிறார் என்பதுதான் படத்தில் நெகிழ வைக்கும் ஒரு விஷயம். அன்பே சிவம் என்பது போல அன்பே அறிவு.
அன்பால் எதையும் சாதிக்கலாம் என்ற நல்ல கருத்தை மதுரையில் ஆரம்பித்து, கனடாவிற்குச் சென்று, மீண்டும் மதுரைக்கு வந்து சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் ராம்.
மொத்தத்தில் ‘அன்பறிவு’ திரைப்படம் அன்பு குறைவு அறிவு குறைவு.











