Saturday, January 29
Shadow

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம் ரேட்டிங் –2.5 /5

நடிகர் நடிகைகள் – ராஜ்கமல், மது, ஸ்வேதா பாண்டி, விஜய் டிவி ராமர், ஜெயச்சந்திரன், கிறிஸ் பெப்பி, மற்றும் பலர்.

இயக்கம் – வரதராஜ்.

ஒளிப்பதிவு – சதீஷ்குமார்- கர்வா மோகன்.

படத்தொகுப்பு – சரவணன் ஜி என்.

இசை – விவேக் சக்கரவர்த்தி.

தயாரிப்பு – ரெயின்போ புரோடக்சன்ஸ்.

ரேட்டிங் –2.5 /5

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு வழியில் நல்லதாக இருந்தாலும், பல வழிகளில் பலருக்கும் அது ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது.

தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் எனும் கருவியை அனைவரும் கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த மொபைல் மூலம் பல நன்மைகள் நம்மை வந்து சேர்ந்தாலும் சில தீய சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

குறிப்பாக இளம் பெண்களை தவறாக சித்தரித்து அவர்களை மிரட்டி, பணம் பறிக்கும் ஒரு மோசமான கும்பல் சில ஆண்டுகளாக நமது நாட்டில் உலாவிக் கொண்டு இருக்கிறது.

பெண்களை குறி வைத்து அவர்களின் மொபைலுக்கு எப்படியெல்லாம் நுழைகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக தோலுரித்துள்ள திரைப்படம் தான் “பென் விலை 999 மட்டுமே” திரைப்படம்.

பிளே பாயாக சுற்றி திரியும் கதாநாயகன் ராஜ்கமல் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசி வருகிறார்.

காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி அவர்கள் மூலமே பணம் சம்பாதிக்கிறார்.

அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் பயந்து வாழ்கிறார்கள்.

இளம் பெண்கள் குறிப்பாக குளிக்கும் போதும் தனது ஆண் காதலனுடன் வெளியே சுற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” ஒன்றை பொருத்தி அவர்களின் அந்தரங்கங்களை வீடியோவாக எடுத்து வருகிறது ஒரு கும்பல்.

இப்படியாக எடுக்கப்படும் வீடியோவை அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி அந்த பெண்களிடம் பணம் பணம் பறிப்பது தான் அந்த கும்பலின் வேலை.

இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு சில பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த மர்ம கும்பலை வலைவீசி பிடிக்க விரைகிறது தமிழக காவல்துறை.

போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதே சமயம், கதாநாயகி ஸ்வேதா பாண்டி, காதலிக்க ஆரம்பிக்கிறார் கதாநாயகன் ராஜ்கமல்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் ராஜ்கமல் கெட்டவன் என்று ஸ்வேதா பாண்டிக்கு தெரியவருகிறது.

இறுதியில் கதாநாயகன் ராஜ்கமலை விட்டு கதாநாயகி ஸ்வேதா பாண்டி, சென்றாளா? போலீஸ் பிடியில் கதாநாயகன் ராஜ்கமல் சிக்கினாரா? என்பதுதான் இநத பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
திரைப்படத்தின் மீதிக்கதை.

Read Also  உணர்வு - திரை விமர்சனம்

இந்த பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரைப்படத்தின் கதாநாயகனாக ராஜ்கமல் நடித்திருக்கிறார்

கதாநாயகன் ராஜ்கமல், சின்னத்திரை நடிகர் என்றாலும் வெள்ளித்திரையில் அவ்வப்போது வந்து ஜொலித்துவிட்டுச் செல்கிறார்.

மீட்டர் ஏற்றாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அக்கதாபாத்திரத்தை நேர்த்தியாக்கியிருக்கிறார்.

எதிர்மறை நிழல் படிந்த கதாபாத்திரம்தான்.

அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

செல்போன் மூலம் சிக்கிக்கொள்ளும் பெண்களிடமும் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில் சிக்கியவர்களிடம் மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இரு முகங்களைக் காட்டியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் சற்று ஓவரான நடிபபை தவிர்த்திருக்கலாம்.

கதாநாயகி ஸ்வேதா பாண்டி, நடிப்பில் பெரிதான ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அக்கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்த ஸ்வேதா பாண்டி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

கதாநாயகி நடிப்பதற்கு.
இன்னும் சற்று கூடுதல் பயிற்சி எடுக்கலாம்

ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பல் பின்னலில் உள்ளவனாக வரும் ஆப்பிரிக்க நடிகர் நன்றாகவே நடித்திருக்கிறார்.

முதல் பாதியில் விறுவிறுப்பை ஏற்றிய இயக்குனர் வரதராஜ்,

இரண்டாம் பாதியில் சற்று தொய்வை ஏற்படுத்தி விட்டார்.

விழிப்புணர்வு திரைப்படமாக எழ ஆரம்பித்த கதை மெதுவாக நகர நகர காதல் காட்சிகளுக்குள் மூழ்கி போனது.

முதல் பாதியில் கொடுத்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் இக்கால பெண்களுக்கான நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படமாக நிச்சயம அமைந்திருக்கும்.

சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகனின் ஒளிப்பதிவு, சரியான வெளிச்சத்தில் சரியான காட்சிகளை மட்டும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

அதிலும், கொடைக்கானலில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது.

விவேக் சக்ரவர்த்தியின் இசையையும் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது.

பாடல்களில் சற்று கூடுதல் கவனம் கொஞ்சம் செலுத்தியிருந்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ திரைப்படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படம்.

CLOSE
CLOSE