அரசியலில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் – டி.ராஜேந்தர்*
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் பேசுகையில், சினிமா தொழில் இன்று நஷ்டமடைந்து வருவதாகவும் அதை காப்பாற்ற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் ரஜினி,கமலை விட அரசியலில் சீனியர் தான் எனவும். அரசியல் குறித்து அவர்கள் எடுக்கும் முடிவு குறித்து தான் எந்த கருத்தும் கூற முடியாது என்றும் தான் எந்த கருத்து கூறினாலும் அதை யார் கேட்கபோகிறார்கள் எனவும் டி.ராஜேந்தர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என்று குறிப்பிட்டார்.











