பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விரைவில் தடை⁉ – மத்திய அமைச்சர்*
இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சக அதிகாரிகளிடம் இதுகுறித்த அறிக்கை வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இவ்வார இறுதியில் அறிக்கையை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.











