இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து நாளை ஆஜராக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இப்போது, கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்மனை ஏற்று, கமல் நாளை மார்ச் 3 – ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!