ஊமைச் செந்நாய் திரை விமர்சனம் ரேட்டிங் – 2 25 /5

நடிகர் நடிகைகள் – மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, அருள் டி.சங்கர், ஜெயக்குமார், கஜராஜ், கார்த்திக், சாய் ராஜ்குமார், மற்றும் பலர்.
தயாரிப்பு – லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்.
இயக்கம் – அர்ஜுனன் ஏகலைவன்.
ஒளிப்பதிவு – கல்யாண் வெங்கட்ராமன்.
படத்தொகுப்பு – அதுல் விஜய்.
இசை – சிவா
திரைப்படம் வெளியான தேதி – 10 டிசம்பர் 2021
ரேட்டிங் – 2 25 /5
தமிழ் திரைப்பட உலகில்
வித்தியாசமான கதை களங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதனால் பலரும் பல விதமான கதைகளை இயக்குனர்கள் சொல்ல முயற்சித்து வருகிறார்கள்.
வித்தியாசமான கதைகளை விட வித்தியாசமான திரைக்கதைகள் தமிழ் திரைப்பட உலகில் அதிகம் கவனிக்கப்படுகிறது.
மிகச் சாதாரணமான ஒன்லைனை வைத்துக்கூட அசாதாரணமான திரைப்படங்களைத் தந்துவிட முடியும்.
தமிழ் திரைப்பட உலகில் நிறைய திரைப்படங்கள் அப்படியான உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.
உச்சம் தொட்ட திரைப்படங்கள் எல்லாமே மிகவும் அழகான திரைக்கதையோடுதான் இருக்கும்.
இந்த ஊமைச் செந்நாய் திரைப்படமும் அதேபோல் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் சில வித்தியாசங்களை செய்திருக்கிறது.
தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் கதாநாயகன் மைக்கேல் தங்கதுரை.
இவரின் முதலாளி கஜராஜ், அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரைப் பின் தொடரும் வேலையை அவரது முதலாளி கஜராஜ் ஒப்படைக்கிறார்.
தனது முதலாளி கஜராஜின் பொய் சொல்லி தன்னிடம் இந்த வேலையை கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்த மைக்கேல், அந்த வேலையை விட்டு விலகுகிறார்.
அதோடு ஜெயக்குமாருக்கும் போன் செய்து இந்த பின் தொடர் வேலை பற்றி சொல்லிவிடுகிறார்.
இதனால் ஆத்திரமடையும் கஜராஜ், அவரை உளவு வேலை பார்க்கச் சொன்னவர்கள் மைக்கேலின் காதலி கதாநாயகி சனம் ஷெட்டியைக் கடத்தி கொலையும் செய்துவிடுகிறார்கள்.
கதாநாயகி சனம் ஷெட்டியைக் கடத்தி கொலை செய்தவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் கதாநாயகன் மைக்கேல். அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் இநத ஊமை செந்நாய் திரைப்படத்தின் மீதிக் கதை.
எதையோ பறிகொடுத்தவராக, சோகமே உருவானவராக மட்டுமே திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார் கதாநாயகன் மைக்கேல்.
அவர் மருத்துவர் ஏதோ ஒரு கொலைக் குற்றத்தில் கைதாகி சிறை சென்றவர் என எங்கோ ஒரு இடத்தில் வசனம் வருகிறது.
அதை வைத்து மட்டுமே அவர் யார் என திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பழி வாங்கும் சமயத்தில் மட்டும் கொஞ்சம் கோபத்தைக் காட்டுகிறார்.
கதாநாயகி சனம் ஷெட்டி, கொஞ்ச நேரமே வந்தாலும்.
கதாநாயகி சனம் ஷெட்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்திருக்கிறார்.
கதாநாயகன் மைக்கேல் தங்கதுரையின் காதலியாக வரும் கதாநாயகன் சனம் ஷெட்டியின் காதல் காட்சிகள் ஓரளவிற்கு ஒர்க்கவுட் ஆக இருக்கிறது.
கதாநாயகன் மைக்கேலைப் பார்த்ததுமே அவர் ஒரு மருத்துவர் தான் என கண்டுபிடித்து விடுகிறார்.
இருவரும் அடுத்த சில காட்சிகளில் காதலர்களாகி விடுவது வழக்கமான தமிழ் திரைப்படம் தான்.
திரைப்படத்தில் அமைச்சரைத்தான் வில்லனாகக் காட்ட வேண்டும்.
ஆனால், அவரை அதிகம் காட்டாமல் அவர் சொன்ன வேலைகளைச் செய்யும் போலீஸ் அதிகாரி அருள் சங்ககரைத்தான் திரைப்படத்தில் அதிகம் காட்டுகிறார்கள்.
அவர் சொன்ன வேலைகளைச் செய்ய இரண்டு ரவுடிகள் என அவர்கள்தான் திரைப்படத்தில் அதிகம் வருகிறார்கள்.
அரசியல் மோதல், உளவு பார்ப்பது, ஆள் கடத்தல், ரவுடியிசம் என எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. எதிலும் ஒரு அழுத்தமும், முழுமையும் இல்லாததால் திரைப்படத்துடன் ஒன்ற முடியவில்லை.
டிடெக்டிவ், கிரைம், திரில்லர் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன்.
திரைப்படத்தில் நிறைய காட்சிகள் மிஷ்கின் பாணியில் இருக்கிறது.
கதாநாயகன் பிளாஸ்பேக் இல்லாமல் அவரை பற்றி வசனங்கள் மூலம் சொல்லியிருப்பது சிறப்பு.
அதுபோல் பல விஷயங்கள் வசனங்கள் இல்லாமல் புரியும் படி எடுத்திருக்கிறார். கண்டெயினர் சண்டைக்காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை திரைப்படமாக்கிய விதம் அருமை.
கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கிரைம் திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சிவா.
மொத்தத்தில் ‘ஊமைச் செந்நாய்’ திரைப்படம் ஓகேதான்.











