ஓவரா சிரித்ததால் ஹிப் ஹாப் ஆதியை ஓங்கி அடித்த ‘ஓ மை கடவுளே’.

ஓவரா சிரித்தாள் ஹிப் ஹாப் ஆதியை ஓங்கி அடித்த
‘ஓ மை கடவுளே’.

கடந்த வாரம் வெள்ளியன்று காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமா களைகட்டியது.

காதலர்களுக்கு விருந்தளிக்க காதல் இளசுகளுக்கான திரைப்படங்கள் வெளியானது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் வெளியானது.

ஆக்சஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.

இத்துடன் ஹிப் ஹாப் ஆதி இசையைமத்து நடித்த நான் சிரித்தால் திரைப்படமும் வெளியானது.

சுந்தர் சி தயாரித்த இந்த திரைப்படத்தை ராணா என்பவர் இயக்கியருந்தார்.

ஹிப் ஹாப் ஆதி படங்களுக்கு க்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருப்பதால் முதல் நாள் நல்ல வசூலானது.

ஆனால் அடுத்தடுத்து கலவையான விமர்சனங்களையே பெற்றது. திரைப்படம் முழுவதும் கெக்கே பேக்கே என சிரித்துக் கொண்டே இருப்பார் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி.

இதற்காக 50 வகையான சிரிப்புகளை அவர் ஹோம் ஓர்க் செய்தாராம்.

ஆனால் எல்லாம் சிரிப்பும் ஒரே மாதிரிதான் இருந்தன. கதாநாயகியும் கவர்ச்சியான உடைகளை தோன்றினார்.

இந்த திரைப்படத்துடன் மோதிய ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இது முழுக்க முழுக்க காதலர்களுக்கான திரைப்படமாக இருந்தாலும் கொஞ்சம் கூட கவர்ச்சியே இல்லாமல் படமாக்கப்பட்டது.

எனவே இதனை அனைத்து தரப்பு குடும்பத்தினரும் ரசித்தனர்.

இதனால் தற்போது அதிக திரை அரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நான் சிரித்தால் படத்தை விட ஓ மை கடவுளே நல்ல வசூலையும் விமர்சனங்கள் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரு படங்களுக்கும் இன்று ஒரே நாளில் வெற்றி மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!