சின்னஞ்சிறு கிளியே திரை விமர்சனம். ரேட்டிங் –3./5

நடிகர் நடிகைகள் – செந்தில் நாதன், சான்ட்ரா நாயர், பதிவத்தினி, அர்ச்சனா சிங், பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் மற்றும் பலர்.

தயாரிப்பு – செண்பா கிரியேஷன்ஸ்

இயக்கம் – சபரிநாதன், முத்துபாண்டியன்.

ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன்.

படத்தொகுப்பு – குமரேஷ் கே..டி

இசை – மஸ்தான் காதர்

திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021

ரேட்டிங் –3./5

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த காக்கிசட்டை திரைப்படமும் தல நடித்த என்னை அறிந்தால் திரைப்படமும் மனித உறுப்புகளைக் கடத்துவது ஆங்கில மருத்துவம் சார்ந்த கதைகள்தான்.

அதேபோல்தான் சின்னஞ்சிறுகிளியே திரைப்படத்தின் கதையும் அதே போல்தான் இருக்கிறது.

தற்போது உள்ள காலகட்டங்களில் ஆங்கில மருந்துகள் தயாரிக்கும் கம்பெனியின் முதலாளிகள் நோயாளிகளுக்கு குணப்படுத்தும் மருந்துகளை தயாரிப்பதை விட்டுட்டு பலவிதமான கிருமிகளை பரப்பி விட்டு இந்தக் கிருமிகளுக்கான மருந்துகள் தயாரிக்கின்றனர்.

தற்போது நாம் இரண்டு வருடமாக அனுபவித்து வரும் கொரோனா வைரஸ் நோய் கிருமிகளும் அப்படித்தான்.

எவனோ ஒருவன் இந்த கொரோனா வைரஸ் நோய்க்கிருமியை பரப்பி விட்டு விட்டார்கள்.

அந்த கிருமி கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்த வேலை யாருடையது ஆங்கில மருந்து தயாரிக்கும் கம்பெனி உடையது.

குழந்தைகளை கடத்தி மனித உறுப்புகளை திருடும் கும்பல் பற்றிய கதையுடன் அப்பா மகள் உறவை மிகவும் அழகாகவும் இயற்கை உணவு பழக்கங்களை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.

ஒரு சராசரி குடும்பத்தை சுற்றியே நகரும் கதையாக,
சராசரி மனிதனால் அவனுடைய வாழ்க்கையில் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் சரியாகச் சொல்லியிருக்கும் திரைப்படம்தான் இந்த சின்னஞ்சிறு கிளியே.

கதாநாயகன் செந்தில்நாதன் ஆங்கில மருந்து மீது அதிக நாட்டம் இல்லாமல் இருக்கிறார்.

அவரது தாத்தா, பாட்டி என குடும்பமே இயற்கை மருத்துவத்தில் சிறந்தவர்கள்.

ஆகையால் அவர் வசிக்கும் கிராமத்தில் இயற்கை மருத்துவம்தான் சிறந்தது என்று கூறி இயற்கை உணவகத்தை நடத்தி வருகிறார் கதாநாயகன் செந்தில்நாதன்.

அதே ஊரில் வசிக்கும் கதாநாயகி சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் கதாநாயகன்
செந்தில்நாதன்.

பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் கதாநாயகி சாண்ட்ரா நாயரை இறந்துவிடுகிறார்..

தனது ஐந்து வயது மகளை மிகவும் அதிகமான பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

ஆறு வயதில் இருக்கும் போது, ஒரு திருவிழாவில் கதாநாயகன் செந்தில்நாதனின் மகள் காணாமல் போக, மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.

இறுதியில், கதாநாயகன் செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே இந்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தச் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன் ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒரு பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து இருக்கும் சாண்ட்ரா நாயர் மிகவும் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் திரைப்படம் பார்க்கும் நம்மளை
கவர்ந்திருக்கிறார்.

தந்தை மகளை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்த குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன்
பாலாஜி சண்முகசுந்தரம், ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்.

கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

திரைப் படத்தின் இடைவேளை வரை கதை திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை.

இடைவேளைக்குப்பிறகு மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

கதையில் உள்ள அழுத்தம் வலு, திரைக்கதையிலும்,  கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.

இந்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது.

பல விருதுகளை குவித்த திரைப்படம் தான் இந்த சின்னஞ்சிறு கிளியே.

இசையமைப்பாளர் மஸ்தான் காதரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது.

திரைப்படத்தின் பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.

பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் கதையின் மீதும், கதாபாத்திரங்களின் மீதும் மட்டும் நம்பிக்கை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

இயற்கை மருத்துவம், இயற்கை வணவு, தமிழ்ப் பற்று, தமிழரின் பாரம்பரியம் குடும்ப உறவுகள் என பாரம்பரியத்தின் மீது அதிகப் பற்று வைத்துள்ளர் இயக்குனர் சபரிநாதன், முத்துபாண்டியன்.

என்பது காட்சிக்குக் காட்சி புரிகிறது. தாத்தா, பாட்டி, பேரன், கொள்ளுப் பேத்தி, தாய்மாமன், என குடும்பப் பாசத்தை நெகிழ்வான உணர்வுடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம் பார்க்கலாம்.

error: Content is protected !!