சுஜித் மரணம் குறித்து நடிகர் விஷால்

சுஜித் மரணம் குறித்து நடிகர் விஷால்

திருச்சி மணப்பாறை அருகே 25ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்த‌தாக அறிவித்தார்கள். சுஜித் இழப்புக்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அப்பாவியான குழந்தை சுஜித்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!