திரையரங்குகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை ஓடிடியில் திரைப்படம் வெளியிட தடையில்லை.. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி.

பொது மக்கள் திரையரங்குகளில் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகள் மூடப்பட்டது.

கிட்டதட்ட பல மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் திரையரங்கு நிர்வாகிகளும் அதனை சார்ந்த வணிகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

எனவே திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை தமிழக அரசிடம் திரைத்துறை சங்கங்கள் வைத்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே திரையரங்குகள் திறக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

மேலும் ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் கிடையாது.

இதற்கு திரைத்துறையினர் தான் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

எனவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!