தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறப்பது, படப்பிடிப்புகளை துவக்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை.

தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறப்பது, படப்பிடிப்புகளை துவங்குவது உள்ளிட்டவை குறித்து திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுடன்தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் பன்னீர்செல்வம், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் தொடர்ந்து தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் துவங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன
தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாகவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தமிழ் திரைப்பட சம்பந்தமான எந்த ஒரு பணிகளும் நடைபெற்றவில்லை.

அதுபோல திரையரங்குகள் திறக்கப்படவில்லை. 4ம் கட்ட ஊரடங்கிலும் இந்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடித்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!