நடிகர் சூர்யாவுக்கு இனி தெலுங்கு திரைப்படங்களுக்கு புதிய குரல் டப்பிங் கலைஞர் மாற்றம் ஏன்?
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.
இந்த திரைப்படத்திற்கு. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா பொது முடக்கத்தால் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட உலகை போல நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கிலும் மிக பெரிய மார்கெட் உள்ளது.
எனவே தெலுங்கிலும் இந்த திரைப்படத்தை வெளியீடு செய்கின்றனர்.
தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் வெளியாகிறது.
நடிகர் சூர்யாவின் தெலுங்கு பதிப்பு திரைப்படங்களுக்கு ஸ்ரீனிவாஸ மூர்த்தி என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்து வந்தாராம்.
தற்போது பிரபல நடிகர் சத்திய தேவ் என்பவர் நடிகர் சூர்யாவுக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம்.
ஏன் இந்த டப்பிங் கலைஞர் மாற்றம் என்ற விவரம் தெரியவில்லை.
இது இயக்குனர் முடிவா இல்லை நடிகர் சூர்யாவின் முடிவாக இருக்குமா.?











