நடிகை அமலாபாலுக்கு திருமணம் ஆனது உண்மையா ? காணாமல் போன புகைப்படங்கள் !
தமிழ் திரைப்பட உலகிற்கு விகடகவி என்ற திரைப்படத்தின் முலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்குப்பின் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அமலாபால். இவர் மைனா, தலைவா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் கிரீடம், தெய்வத்திருமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய்யை
திருமணம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்.
இந்நிலையில், அவர், இன்று பிரபல மும்மை பாடகரை பாவ்னீந்தர் சிங் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்னதாகவே அமலாபால் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது.
அதற்குக் காரணம் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னீந்தர் சிங் அமலாபாலுக்கும் தனக்கும் திருமணம் ஆனது மாதிரியான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படத்தை அவர் நீக்கிவிட்டார். இந்நிலையில் திருமணம் பற்றி அமலா தரப்பு மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஒரு ஈவண்ட்டின் போது எடுக்கப்பட்டவை என்றும் அதை ஏன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.











