நட்சத்திர விடுதியில் ரகளை – ‘டார்லிங் 2’ இயக்குநர் மீது வழக்கு

சென்னை அண்ணா சாலையில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு ‘டார்லிங் 2’ படத்தை இயக்கிய இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவர், மதுபோதையில் அந்த நட்சத்திர விடுதியில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் மீது அந்த பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.