பின்னணி பாடகர் அந்தோணி தாஸ் இசையமைத்த ‘வைரி’ திரைப்பட பாடல்களை வெளியிட்ட திரை உலக இசை பிரபலங்கள்
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த சினிமா துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில், கடந்த 11 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் விஜய் தேசிங்கு எழுதி இயக்கி தயாரிக்கும் ‘வைரி’ திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.
அந்தோணி தாஸ் அவர்கள்
நாட்டுப்புற கலைஞராக இருந்து, திரைப்பட பின்னணிப் பாடகரா வளர்ந்த அந்தோணி தாஸ் ‘வைரி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
எங்களின் சிறிய தயாரிப்பு திரைப்படமான ‘வைரி’ திரையிசை ஆல்பத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டதும்,
”சிறியதும் அழகுதான், சிறியதும் பெரியதுதான்” என்ற உணர்வுடன், மிகுந்த அன்புடன், பாடல்களை வெளியிட்டு, எங்களுக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்ததற்காக- தற்போதைய தமிழ் சினிமாவின் இசை சகலகலவல்லவர்கள் திரு.டி.இமான், திரு. அனிருத், திரு. சந்தோஷ் நாராயணன், திரு. ஹிப் ஹாப் தமிழா, மற்றும் DJ திரு. NUCLEYA அவர்களுக்கு நன்றிகள் பல.
நாட்டுப்புற கலைஞராக இருந்து, திரைப்பட பாடகரா வளர்ந்த திரு. அந்தோணி தாசன் அவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்வதில் எங்களுக்கு பெருமை. அவரால் ‘வைரி’க்கு பெருமை.
மேலும் எங்களின் இசை ஆல்பத்தை வெளியிடும் ‘SONY MUSIC’ அசோக் அவர்களுக்கும். நன்றிகள் பல.
இதற்கு முன்பே வைரியின் ‘WHAT ARE YOU TALKING LADY ‘ என்ற PROMOTIONAL SONG VIDEO இணையத்தில் 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதுபோல எங்களின் மற்ற பாடல்களும் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.
மேலும் இசை வெளியீடு என்பது எங்களுக்கான அடையாள வெளிப்பாடு மட்டும்தான். இதற்கு மேல் இன்னும் திரைப்பட வெளியீடு என்ற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு காத்துக்கொண்டிருக்கிறது. ‘எல்லா சவால்களும் ஒருநாள் கடந்துபோய்தான் தீரும்’ என்ற மிகுந்த தர்க்க நம்பிக்கைகளுடன், சவால்களை கடக்க காத்திருக்கிறோம்.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் புரோமோஷன் பாடலான “வாட் ஆர் யு டாக்கிங் லேடி..” என்ற வீடியோ பாடல் இணையத்தில் 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் நிலையில், திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.











