பின்னணி பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று காலமானார்.
மதுரை மாவட்டம் பறவை என்ற பகுதியை சேர்ந்தவர் முனியம்மா.
நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நாட்டுப்புற பாடல்களில் அந்தத்துறையில்
தனித்தன்மை வாய்ந்தவர் இவர்.
பல வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புறப் பாட்டுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்
சியான் விக்ரம் நடித்த தூள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.
இதுவரை 80 திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
அவர் கடைசியாக நடித்த நடிகர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு மூன்று மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர் இதில் செந்தில்குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குன்றியவர்.
இவரை நினைத்து அடிக்கடி வருந்துவது உண்டு.
எனவே தமிழக அரசு சார்பில் ஏதேனும் உதவிகள் கிடைக்குமா என பலமுறை முயற்சி செய்து வந்தார்.
மேலும் கிராமப்புற சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொண்டுள்ளார்.
மண்பானையில் சமையல் செல்வதால் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் என அதிலும் பிரபலமானார்.
சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போனதால் வறுமையில் வாடினார்.
அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவர்களுடைய நிலையை அறிந்து ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இவரது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி அதன் வட்டி தொகையை இவருக்கு கிடைப்பது போன்று செய்தார் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
இதையடுத்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர் மேலும் நடிகர் சங்கம் சார்பில் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார்.
தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடதக்கது.











