பேட்டி கொடக்கவில்லை என்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் “மீடியா டெரரிசம்”. ஷான் ரோல்டனின் ஷாக் ட்வீட்

தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஷான் ரோல்டன்.

இவர் இசையமைத்த திரைப்படங்கள் சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பவர் பாண்டி, விஐபி 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் இவரது இசையில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் மற்றும் தாராள பிரபு திரைப்பட பாடல்கள் மிக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சற்று முன் அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரை இந்தளவு ஆவேசமாக பேச வைத்தது யார்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அதிலும் மோசமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

அது ஏனோ? என்பதுதான் தெரியவில்லை.

அவரின் 3 பதிவுகள் இதோ…

நடிகைகளின் தொப்புள் இடையளவுக்கு மதிப்பெண்கள் போடும் ஓதேசி நாய்களிடம் என் இசையைப்பற்றி பேச எனக்கு என்ன அவசியம் உள்ளது?

பேட்டி கொடக்கவில்லை யென்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் “மீடியா டெரரிசம்”.

என்னை வேண்டுமென்றே வாரிக்கொண்டே இருக்கும் ஒரு ஊடகம், என்னை அவர்களுக்கு பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். இதுதான் அக்மாரக் எச்சைத்தனம்.

 

error: Content is protected !!