விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்திற்கு கிடைத்த தீர்ப்பு

விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்துள்ள படம் ‘கொலைகாரன்’. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/எ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இயக்குநர் ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கியுள்ள இந்த படத்திற்க்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!