Wednesday, July 15
Shadow

அஜித்குமார் மோதுவதற்கு சிக்ஸ் பேக் காட்டிய வலிமை திரைப்படத்தின் வில்லன்

இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கதாநாயகியாக காலா பட நாயகி ஹீமா குரோஷி நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் திரைப்படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பற்றி தகவல்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை படக்குழுவினர்.

ஆனால் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பவர் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

தெலுங்கில் ஹிட்டான ஆர்.எக்ஸ் 100 என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக வலிமை பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 2 மாத இடைவெளியில் வீட்டிலேயே ஒர்கவுட் செய்த தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் அஜித்குமார் ஸ்டைலில் ஒரு பன்ச் டயலாக் போல ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“லாக் டவுன் நமது திட்டங்களை மாற்றியது. ஆனால் நமது குறிக்கோளை அதனால் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.