அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பிரபல தயாரிப்பாளர்

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ஜீவா நடித்த ‘கீ’, ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’ உள்பட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இணைந்து ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரனின் அமமுக மாறியபோது அமமுகவில் இணைந்தார். இந்நிலையில் அமமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இவர் இணைந்துள்ளார்.