ஆன்டி இண்டியன் திரை விமர்சனம் ரேட்டிங் –1.75./5.

நடிகர் நடிகைகள் – ராதாரவி, நரேன் வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், விஜயா மாமி – பசி சத்யா, கர்ண ராஜா, சினேபா, வேலு பிரபாகரன்,
மகேஷ், அமரர் கில்லி மாறன், அனில் குமார், ஷான், சார்லஸ் வினோத், விஜய் டிவி பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி, அமரர் வெங்கட் சுபா, மற்றும் பலர்.
தயாரிப்பு – மூன் பிக்சர்ஸ்.
இயக்கம் – ப்ளூ சட்டை சி இளமாறன்.
ஒளிப்பதிவு – கதிரவன்.
படத்தொகுப்பு – சுதர்சன்.
இசை – ப்ளூ சட்டை சி இளமாறன்.
திரைப்படம் வெளியான தேதி – 10 டிசம்பர் 2021
ரேட்டிங் –1.75./5
தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகன், கதாநாயகி, காமெடி சண்டை இல்லாமல் ஒரு படம் வருகிறதென்பது அபூர்வமான ஒரு விஷயம்தான்.
அப்படியான ஒரு விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது இந்த ஆன்டி இண்டியன் திரைப்படம்.
தமிழ் திரைப்பட உலகில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்து பிரபலமானவர்தான் ப்ளூ சட்டை மாறன்.
இவருக்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர்.
அனைத்து திரைப்படங்களைக் கண்டபடி விமர்சனம் செய்பவர் என்று பெயரெடுத்தவர் ப்ளூசட்டை மாறன் என்கிற இந்த திரைப்படத்தின் இயக்குனர் ப்ளூ சட்டை சி இளமாறன்..
தமிழ் திரைப்படங்களை அதிகம் விமர்சிப்பவர்கள் யாரும் திரைப்படங்களை இயக்க முன் வர மாட்டார்கள்.
அப்படி திரைப்படம் இயக்க வந்தவர் ப்ளூ சட்டை சி இளமாறன் தனது திரைப்படத்திற்கு வரப் போகும் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ப்ளூ சட்டை சி இளமாறன்.
சுவர் விளம்பரங்களை வரைந்து வரும் ஓவியரான பாட்ஷா கொலை செய்யப்பட்டு இறந்து விடுகிறார்.
பாட்ஷாவை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்து விடுகிறார்கள்.
பாட்ஷாவின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு நடக்கிறது.
பாட்ஷா உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்கிறார்கள்.
இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர் பாட்ஷா.
ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்று கூறி முஸ்லிம் மதத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உடலை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்
இதன் பிறகு வீட்டுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்ட பாட்ஷாவின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்கு இந்துமத முறைப்படி அடக்கம் செய்ய எடுத்து செல்கிறார்கள்.
அங்கு இறந்தவரின் பெயர் பாட்ஷா என்பதால் அவருடைய தாய் இந்து என்பதாலும் தந்தை முஸ்லிம் என்பதாலும் அங்கும் இந்து மயான பூமியில் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்து மயான பூமியில் பாட்ஷா உடலை அவர் இந்து அல்ல முஸ்லிம், அதனால் அடக்கம் செய்ய முடியாது என சொல்லிவிடுகிறார்கள்.
பாட்ஷாவின் அம்மா, இந்துவாக இருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர் என்பதால் கிறிஸ்துவர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய முன் வருகின்றனர்.
இதனால், குழப்பமான சூழல் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னை ஒரு அரசியல் சர்ச்சையுடன் தீர்த்து வைக்கப்படுகிறது.
இன்னொருபுறம் பாட்ஷா உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
இறுதியில் பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதுதான் இந்த ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த ஆண்டி இண்டியன் திரைப்படத்தில் கதாநாயகன் என்று யாரும் கிடையாது,
கதாநாயகி என்றும் யாரும் கிடையாது.
இந்த ஆண்டி இன்டியன் திரைப்படத்தில் பாட்ஷா கதாபாத்திரத்தில் இளமாறன் என்னும் புளு சட்டை மாறன் நடித்திருக்கிறார்
ஆரம்பம் முதல் இறுதிவரை பிணமாக இருப்பதால் இவரது நடிப்பை பார்க்க முடியவில்லை.
ஆனால், கதை இவரை சுற்றியே நடக்கிறது.
சடலம், அடக்கம் செய்ய மறுக்கும் மதத்தினர்,
அதை சுற்றி நடக்கும் அரசியல் என திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ப்ளூ சட்டை சி இளமாறன்.
முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்கிறது.
ஒரு சில இடங்களில் வசனங்கள் ‘நச்’ என்றும் சில இடங்களில் ‘ச்சே’ என்றும் இருக்கிறது.
தேவையில்லாத காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது.
அதுபோல் நீண்ட காட்சிகளும் திரைப்படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
மதவாதிகள், காவல்துறை, அரசியல் கட்சிகள், மீடியா என அனைவரையும் வைத்து செய்திருக்கிறார்.
மதங்களுக்கிடையே உண்டாகும் சில பிரச்சனைகளையும், சலசலப்பையும் காட்டியதற்கும், மதத்தால் சில அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் செய்யும் சூழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கும் பாராட்டுகள்.
பாட்ஷாவின் தாய் மாமன், அவர் சார்ந்த இந்து கட்சியின் தலைவர், பாட்ஷாவின் சித்தப்பா, அவர் சார்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள், பாட்ஷவின் அம்மா, அவர் சார்ந்த கிறிஸ்துவ மதத் தலைவர்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் அந்த உடலை வைத்து தங்கள் மதத்திற்காக அரசியல் செய்கிறார்கள்.
இறந்து போன பாட்ஷா உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வருபவர்களும், அந்த உடலை வைத்து அரசியல் செய்பவர்களும்தான் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்குமே சரியான முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ளூ சட்டை சி இளமாறன்.
திரைப்படத்தில் சொல்ல வரும் கருத்து என்னவோ நல்ல கருத்துதான்.
ஆனால், அதை சாதாரண உருவாக்கத்துடன் மட்டுமே சொல்லியிருப்பதுதான் திரைப்படத்தின் பெரும் குறை.
இயக்குனர் ப்ளூ சட்டை சி
இளமாறனே இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
ஆனால், அதிகம் கவனம் பெறவில்லை.
கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
அசிங்கமான வசனங்களை திரைப்படத்தில் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் முழுநீள ஷார்ட் பிலிம்.











