கோடியில் ஒருவன் திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5

நடிகர் நடிகைகள் – விஜய் ஆண்டனி, ஆத்மிகா, திவ்யா பிரபா, ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பூ ராமு, ஆதித்யா கதிர், சூரஜ் பாப்ஸ், பிரபாகர், சச்சின் கெடேகர், மற்றும் பலர்.

தயாரிப்பு – செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல்.

இயக்கம் – ஆனந்த் கிருஷ்ணன்.

ஒளிப்பதிவு  _ என்.எஸ்.உதயகுமார்

படத்தொகுப்பு – விஜய் ஆண்டனி,

இசை – நிவாஸ் கே பிரசன்னா

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமத்.

திரைப்படம் வெளியான தேதி – 17 செப்டம்பர் 2021

ரேட்டிங் –3 /5

சமீப காலமாக அரசியல் திரைப்படங்களில் ஏழைகளின் சேரியில் உள்ள குடியிருப்புதான் கதையின் கருவாக வைத்து உருவாக்கப்படுகிறது.

அது போலவே இந்த கோடியில் ஒருவன் திரைப்படத்திலும் அதுவே மையக் கரு.

கடந்த வாரம்தான் விஜய் சேதுபதி பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் இதே சாயலில் ஒரு அரசியல் படத்தைப் பார்த்தோம்.

இந்தப் படத்திலும் ஒரு மாவட்டத் தலைவருக்கும், ஒரு சாதாரண இளைஞனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் மோதலைத்தான் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்.

தமிழ் திரைப்பட உலகில் வந்துள்ள இன்னொரு அரசியல் திரைப்படம்தான் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள கொடியில் ஒருவன்.

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஆள்’, ‘மெட்ரோ ‘ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவதாக திரைப்படமாக நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கிய திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் தாய் தனது மகனை மாவட்ட கலெக்டராக ஆக்க வேண்டும் என்ற
கனவுடன் இருக்கிறார் கதாநாயகன் விஜய் ஆன்டனி யின் தாய்.

தனது தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்ற வெறியில் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் கதாநாயகன் விஜய் ஆண்டனி சோழிங்கநல்லூரில் உள்ள
ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்து தங்குகிறார்.

சென்னை அருகில் உள்ள
சோழிங்கநல்லூரில் உள்ள
ஹவுசிங் போர்டு பகுதியில் உள் படிக்காத இளைஞர்களின் தரத்தையும் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி.

அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? கலெக்டராக வேண்டும் என்ற தனது தாயின் கனவை கதாநாயகன் விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? வில்லன்களால் பலவிதமான சிக்கல்களை இருந்து விடுபட்டாரா? இல்லையா என்பதே கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் ஆண்டனி மிடுக்கான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் கதாநாயகன் விஜய் ஆண்டனி காதல் காட்சிகளில் கோட்டை விட்டு விட்டார்.

கதாநாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார்.

இந்த கோடியில் ஒருவன் திரைப்படத்தில் அதிகப்படியான வில்லன்கள் இருக்கிறார்.

கே.ஜி.எப் திரைப்படத்தில் மிரட்டிய வில்லன் ராமச்சந்திர ராஜு இந்த கோடியில் ஒருவன் திரைப்படத்திலும் வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார்.

மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், திரைப்படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் மிக சிறப்பு.

ஒரு வார்டு கவுன்சிலர் என்னவெல்லாம் நல்லது செய்ய முடியும் எப்படி எல்லாம் திருட முடியும் என்பதை இந்த திரைப்படத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும் அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதை புதுவிதமாக காட்டி இருந்தாலும், திரைக்கதை வேகத்தை கூட்டி இருந்தால் கோடியில் ஒருவனை இன்னும் ரசித்திருக்கலாம்.

கதாநாயகன் விஜய் ஆண்டனி போல ஒவ்வொரு வார்டு கவுன்சிலரும் அவரவர் வார்டுக்கு நல்லது செய்தால் பல மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் நல்ல விதமாக மாறும் என்ற யோசனையை மனதில் விதைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்.

கதாநாயகன் விஜய் ஆண்டனி தோற்கும்படியான காட்சிகள் வைத்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம்.

ஆதித்யா கதிர் பஞ்ச் டயலாக் அடிக்கிறார்.

திரைப்படம் பார்க்கும் நம்மளை கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார் ஆதித்யா கதிர்.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை களம் நடிகர்களை கையாண்ட விதம் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.

ஆனால் திரைப்படத்தின் வேகத்தை கொஞ்சம் கூட்டி வந்தால் ரசிப்பதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை.

ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் வேகம் குறைந்த ஒருவன்.

error: Content is protected !!